‘நேரலையில் நியூஸ் வாசித்த பெண்ணின் கையில் இருந்த அந்த பொருள்!’.. இணையத்தில் வைரலான வீடியோ!... வேடிக்கையில் முடிந்த ‘தரமான’ சம்பவம்!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்பிரபல ஆங்கில செய்தி சேனலின் செய்தியாளர் நேரலையில் செய்தி வாசிக்கும் பொழுது அவருடைய கையில் சிகரெட் இருந்ததாக ரசிகர்கள் பார்த்து விட்டு செய்த கமெண்ட் மற்றும் மீம்ஸ்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

பிரபல ஆங்கில செய்தி சேனலான பிபிசியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த செய்தியாளரின் கையில் சிகரெட் போன்ற வெள்ளை நிறத்தில் ஏதோ இருந்தது பார்வையாளர்களுக்கு தட்டுப்பட்டிருக்கிறது. இதனை ஒருவர் பிபிசி நேரலை செய்தி ஓடும் பொழுது தனது மொபைலில் வீடியோ எடுத்து இணையதளத்தில் போட்டு பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த பலரும், “பாவம் அந்த பெண் செய்தியாளருக்கு என்ன அவசரமோ? அதற்குள் செய்தி வாசிப்பதற்கு வந்திருக்கும் அவர் செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறார்!” என்று பலவிதமான கமெண்டுகளை வேடிக்கையாக கொடுத்து வந்துள்ளனர்.
ஆனால் இது பற்றி விளக்கம் அளித்த பிபிசி குழப்பத்திற்கு இடம் தரக் கூடாது என்பதால் அந்த செய்தியாளர் கையில் இருந்தது சிகரெட் அல்ல, அது பேனா என்று விளக்கம் கொடுத்திருக்கிறது. பலரும் அந்த இணையதள வீடியோவின் கீழே சென்று. “உண்மையில் அது சிகரெட் அல்ல. பேனாதான். பேனாவின் கீழ்பாகம் தான் பார்ப்பதற்கு சிகரெட் போன்று இருக்கிறது. உங்கள் வேடிக்கைகளை தள்ளி வையுங்கள்!” என்று கமெண்ட்டுகளை பதிவிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
