‘8 விநாடிகள்’... ‘கொரோனா தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறிய நபர்’... ‘இத்தனை லட்சம் அபராதமா?’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்தைவான் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக, 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்த நபர், அறையை விட்டு வெளியே வந்ததால், அவருக்கு அந்நாட்டு மதிப்பில் ஒரு லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர், தைவான் நாட்டில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் கொரோனா தொற்று காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டார். இதற்காக அவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார்.
தனிமைப்படுத்துதலால், அவர் அறையை விட்டு வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நபர் அனுமதியை மீறி வெளியே வந்ததோடு மட்டுமல்லாமல், ஏதோ ஒன்றை அருகில் இந்த மற்றொரு நோயாளியின் அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த மேசையில் வைத்துவிட்டு, திரும்பவும் தனது அறைக்கு திரும்பினார்.
அவரது இந்த நடவடிக்கை அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. இந்த காட்சிகளின் அடிப்படையில் அவர் 8 விநாடிகள் அறையைவிட்டு வெளியே இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்த தைவான் அரசு, அவருக்கு அந்நாட்டின் மதிப்பு படி ஒரு லட்சம் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ. 2.65 லட்சம் ஆகும். கொரோனா பரவல் காரணமாக தைவான் நாட்டில், மிக கடுமையாக கொரோனா விதிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.