'வீடியோ' கால் மூலமா 'கல்யாணம்' நடந்து பாத்துட்டீங்க... ஆனா இது வேற 'லெவல்'... முக்கியமா அந்த ஒரு 'விஷயம்' தான் 'ஹைலேட்டே'..." வைரலாகும் 'திருமண' அழைப்பிதழ்!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று காரணமாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்ததால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிப் போன நிலையில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த பல திருமணங்களும் தள்ளிப் போனது.

அதிகம் பேர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்பதால் நெருங்கிய சில உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதே போல, ஊரடங்கின் காரணமாக வேறு வேறு ஊரில் இருந்த மணமக்கள் தொலைபேசியில் வீடியோ கால் மூலமாக திருமணம் செய்து கொண்டதும் பல இடங்களில் நிகழ்ந்தது.
இந்நிலையில், சிவ பிரகாஷ் - மஹதி என்ற தம்பதியரின் திருமணம் தொடர்பான திருமண அழைப்பிதழ் அதிகம் வைரலாகி வருகிறது. இன்று காலை இவர்களது திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், அவரது அழைப்பிதழில் தங்களது திருமணத்தை வீடியோ மூலம் நேரலையில் காண வேண்டி லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் மணமக்களின் திருமண நிகழ்வை கண்டு அவர்களை வாழ்த்தவும் குறிப்பிட்டிருந்தனர்.
அனைத்தையும் விட, கல்யாண சாப்பாடு அவரவர் வீடு தேடி வரும் என அந்த அழைப்பிதழில் உள்ளது தான் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. இன்றைய சூழ்நிலையில், மிகவும் சிக்கனமாக செலவுடன் திருமணம் நிகழ்ந்து வரும் நிலையிலும், அனைவரது வீட்டிற்கும் கல்யாண சாப்பாடு வீட்டிற்கே சென்று சேரும் என இடம்பெற்றுள்ளது அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.
மேலும் சிலர், ஆன்லைன் மூலம் மொய் பணத்தை அனுப்பச் சொல்லுவார்கள் போல என்றும் நக்கலாக தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
