"உண்மையில் நாம் என்ன செய்யணும்?".. 'என்னா ஒரு காட்டம்!'.. எதுக்காக இப்படி 'பொறிந்து தள்ளினார்' இளவரசர் ஹாரி?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தொற்று மூலம் இயற்கை தனது கோபத்தை வெளிப்படுத்தி இருப்பதாக பிரிட்டன் இளவரசர் ஹாரி தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டன் இளவரசர் ஹாரி காலநிலை ஆவணப் படங்களுக்கான வெளியீட்டு நிகழ்வின் தலைமை நிர்வாகியுடன் சுற்றுச்சூழல் குறித்து அண்மையில் உரையாடியபோது இவ்வாறு கூறியிருக்கிறார். காலநிலை மாற்றத்தை சமாளிக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கக்கோரி பேசிய ஹாரி தொற்று நோயின் ஆரம்பத்தில் யாரோ தன்னிடம் மோசமான நடத்தைக்காக இயற்கைத் தாய் நம்மை அறைக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளதாக கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசியவர், “உண்மையில் நாம் என்ன செய்யவேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டும் என்று கூறிய ஹாரி இயற்கையுடன் நாம் அனைவரும் எந்தளவுக்கு ஒன்றிணைந்திருக்கிறோம்? நாம் இயற்கையிடம் இருந்து பலவற்றை எடுத்துக் கொள்கிறோம், ஆனால் இயற்கையை பாதுகாப்பதை மிக அரிதாக எப்போதாவது தான் நாம் செய்கிறோம்.
பூமியை காக்க உதவும் ஒரு மழை துளியாக தங்களை ஒவ்வொருவரும் கற்பனை செய்து கொள்ள வேண்டும். வானத்திலிருந்து விழும் மழைத்துளி வெப்பத்தால் காய்ந்த நிலத்துக்கு உயிர் கொடுப்பது போல் நாம் ஒவ்வொருவரும் மழைத் துளியாக இருந்து அக்கறை காட்டினால்தான் என்ன? நாம் கட்டாயம் அதை செய்ய வேண்டும்!” என்று கூறிய இளவரசர் ஹாரி இயற்கை நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறது என்று இறுதியாக கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
