"பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதித்த கொரோனா!.. இதுதாங்க அந்த காரணம்!".. மருத்துவர் சொல்லும் ஆச்சரிய தகவல்கள்.. பிரத்தியேக பேட்டி!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பற்றிய பல்வேறு தகவல்களை மருத்துவர் திரு K ராகவன் Behindwoodsக்கு பிரத்தியேகமாக அளித்துள்ளார். அவர் கூறியதன் சுருக்கமான தகவல்கள்:

“கொரோனா வைரஸ் உடலில் நுழைந்ததும் செல் வெள்ளையணுக்களுக்கு, ‘புலி வருகிறது என்று சொன்னவுடனே வரும் பயத்தை போல’ அனுப்பும் தகவலால் உருவாகும் சைட்டோகைன் ஸ்டார்ம் என்கிற செல்களின் படபடப்புகளும்தான் உடலில் மூச்சுத்திணறால், கிட்னி செயல்பாடு பாதித்தல் உள்ளிட்ட தொற்று மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த வைரஸ் பற்றி ஆய்வுப் பொறுப்புகள் ஜெர்மனியில் GISAID என்கிற ஆய்வுக்குழு கொரோனா பற்றிய தரவுகளைத் திரட்டி, தகவல் வங்கியாகச் சேகரித்து, உலக அளவில் இந்த வைரஸ் பற்றி சரியான தகவல்களை முறையாக வெளியிடவுள்ளது. நம் நோய் எதிர்ப்புச் சக்தி வலுவாக இல்லாதபோது 2, 3 நாட்களிலேயே தொற்றாக மாறும் இந்த வைரஸ், 14 நாட்கள் இருந்தும் நோய் எதிர்ப்புச் சக்தி வலுவாக இருப்பின், நகர்ந்துவிடவும் செய்கிறது. மூக்கு, வாய், கண் முதலிய உறுப்புகள் வழியே நுழைய வாய்ப்புள்ள இந்த வைரஸின் அடர்த்திமிகுந்த அடுக்கு சாதாரண சோப்பு மூலக்கூறுகளால் உடையும். அவ்வாறு இல்லாவடின், இந்த வைரஸ் உடலில் பெருகி, நிமோனியா, மூச்சுத்திணறல் வரை சென்று 3 வாரங்களில் நோயாளியை பாதிப்பில் இருந்து விடுவிக்கவும் அல்லது அழிக்கவும் செய்கிறது.
இதேபோல் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் இயற்கையாகவே பரவக்கூடியதாக உள்ளதாக பேஸ்டர் இன்ஸ்டிடியூட்டின் தலைமை அறிவியலாளர் கூறுகிறார். இந்த கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள், பெண்கள் இருபாலராக இருந்தாலும் உயிரிழப்பைப் பொருத்தவரை ஆண்களே அதிகமாக இருக்கிறார்கள். காரணம் பெண்களுக்கு 2 X குரோமோசோம்களும், ஆண்களுக்கு ஒரு X குரோமோசோமும் ஒரு Y குரோமோசோமும் உள்ளன. இதனால் பெண்களுக்கு ஆண்களை விடவும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதாகவும், இதை பின்பற்றி கொரோனாவுக்கு எதிரான ஆண்டிபாடிகளை உருவாக்கவும், ஒரு ஆய்வும் நடந்துகொண்டிருக்கிறது. இதேபோல் வெப்பத்தினாலோ கிராம்பினை வாயில் வைத்துக்கொண்டால் இந்த வைரஸ் தொற்றுமா என்றால் அவை உண்மையல்ல. 56 டிகிரி செண்டிகிரேட் வரையிலும் இந்த வைரஸால் தாக்குப் பிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேரியா நோய்த்தொற்று பாதிப்பு இருந்த நாடுகளில் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை அவர்கள் ஏற்கனவே எடுத்துக்கொண்டதால், செல்களில் இருக்கும் லைசோசோம்களால் கொரோனாவை எதிர்க்க வல்லதாக இருக்கலாம் என்கிற ரீதியலான கருத்து நிலவுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை புனே வைரலாஜி இன்ஸ்டிடியூட் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து ஆண்டிபாடிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் நமக்கு ஆங்கிலம், ஆயுர்வேதம், சித்த மருத்துவம் என எதிலும் மருந்துகள் கண்டுபிடிக்கப் படாததால், நோய் எதிர்ப்புச் சக்திக்கானவற்றை மட்டும் இந்த மருத்து முறைகளில் இருந்து எடுத்துக்கொள்ளலாம்.
உதாரணமாக கபசுரக் குடிநீரைச் சொல்லலாம். ஹைட்ராக்ஸி குளோரோகுயினைப் பொருத்தவரை மருத்துவ ஆலோசனை இன்றி எடுத்துக்கொள்ளுதல் மாரடைப்புக்கு வழிவகுக்காலம். இதுபோன்ற மருந்துகளை உறுதிப்படுத்திக்கொள்ளாமல் கிட்னி தன் செயல்பாடுகளை இழக்கவும் செய்யலாம். எச்.ஐ.விக்கு கொடுக்கப்படும் மருந்தும் இந்த நோயை எதிர்க்க வல்லதாக இல்லை. கடைசி ஒரு வாரத்தில், இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டிலும், அமெரிக்காவில் ஒரு நிறுவனமும் மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த மருந்துகளின் பாதுகாப்பும், வீரியமும் ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டியது என்பதால் அதுபற்றிய விவாதங்களும் போய்க்கொண்டிருக்கின்றன!”
Dr. K. Raghavan, MD(Paed), MRCPCH, FRCPCH, CCST (UK), FELLOWSHIP NICU Paediatric Neurologist, Developmental & Behavioural Specialist .
Kenmax Integrated Special School, Madurai:
Contact Number: +91-9444444317
Address:
No.17, Mellur, Vinayaga Nagar, KK Nagar
625020 Madurai, India
Website: http://kenmaxschool.com/?page_id=12
மருத்துவர் பேசியதன் முழுமையான உரையை, இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.

மற்ற செய்திகள்
