'எல்லாம் உங்க கைல தான் இருக்கு '... 'இத மட்டும் செய்யல, இந்தியாவில் பலருக்கு வேலை பறிபோகும்'... FICCI எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 11, 2020 07:51 PM

கொரோனா தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வரும் 17-ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Industry Body FICCI Warns Of Massive Job Losses

இதற்கிடையே தொழில்களை மறு தொடக்கம் செய்வதற்கு மத்திய அரசு 9-10 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பினை வழங்க வேண்டும் என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளது. நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எங்கள் தொழில்களை நாங்கள் மேம்படுத்தாவிட்டால், பெரிய அளவில் வேலை இழப்பு ஏற்படும் என்றும், இதனால் பலருக்கு வேலை பறிபோகும் எனவும் எச்சரித்துள்ளது.

இந்த வேலையிழப்புகள் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், அது பொது தளத்தில், மக்கள் வாங்கும் சக்தியினை பெருமளவு குறைக்க வழிவகுக்கும்.  அது உற்பத்தி குறைவு என்ற எதிர்வினையை ஏற்படுத்துவதோடு, பணப்புழக்கத்தையும் பெரிய அளவில் குறைத்து விடும், என FICCI தலைவர் சங்கீதா ரெட்டி மத்திய நிதியமைச்சருக்குக் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வட்டி இல்லாத கடனை 12 மாதங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் FICCI கோரிக்கை வைத்துள்ளது. 

இது சிறு குறு தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு கீழே பணிப்புரியக்கூடியவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும், பிற செலவுகளுக்கும் இந்த நெருக்கடி காலகட்டத்தில் பயன்படுத்தும் என தனது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.  இதற்கிடையே அரசு வழங்கும் கடன்களுக்கு முன்நிபந்தனை விதிக்க வேண்டும். அதில் சிறு குறு நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றும், பணியாளர்களை வேலை நீக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளில் அடிப்படையில் இந்த கடன் தொகையை வழங்கலாம் என FICCI குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தாவிட்டால், வேலையிழப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போகும் என FICCI எச்சரித்துள்ளது.