சென்னையில் முதல்முறையாக 'கட்டுப்படுத்தப்பட்ட' பகுதியாக மாறியுள்ள 'ரயில்' நிலையம்... ஊரடங்கு தளர்வுக்கு பின்னும் 'இங்கு' ரயில்சேவை செயல்படாது...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாதுகாப்பு பணியில் இருந்த 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை மயிலாப்பூரை அடுத்த மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையத்தில் பணியாற்றி வந்த 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் 5 பேரும் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் மூடப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரயில் நிலையம் ஒன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதன் காரணமாக, சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதார துறை விதிகளின்படி 28 நாட்களுக்கு அந்த பகுதி வழியே ரயில் சேவை ரத்து செய்யப்படும் எனவும், ஊரடங்கு தளர்வுக்கு பின்னும் கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையிலான பகுதிகளில் ரயில் சேவை செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.