'கொரோனாவால்' உலகின் 'பணக்கார' கோயிலுக்கே 'இந்த நிலையா'? ... 'இதையே நம்பி இருந்த' ஊழியர்கள் 'திணறிவரும்' அவலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பாதிப்பு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தையும் விட்டு வைக்கவில்லை.

40 நாட்கள் ஊரடங்கு காலத்தில் 400 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக கோயில் நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் உலகிலேயே மிக அதிகம் வருமானம் உடைய வசதியான கோயிலாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் சன்னிதானத்திற்கு தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் வந்து சென்றதால் உண்டியல் காணிக்கை, விடுதி கட்டணம் என பல வழிகளிலும் திருமலை தேவஸ்தானத்திற்கு வருவாய் நிற்காமல் கிடைத்துக் கொண்டிருந்தது.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் கோயில் நடை சாத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊழியர்களுக்கு 50 சதவீதம் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 40 நாட்கள் ஊரடங்கினால் 400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு திருப்பதி கோவிலுக்கு ஏற்பட்டதாக திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்திருந்தார்.
இந்த வருவாயைக் கொண்டுதான் ஒவ்வொரு மாதமும் சுமார் 120 கோடி ரூபாய் வரை மொத்த ஊழியர்களுக்கும் மாத சம்பளமாக கொடுக்கப்பட்ட வந்தநிலையில் தற்போது ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கொடுக்க முடியாத நிலை உண்டாகி உள்ளதாக திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் 2500 கோடி ரூபாய் ஊதியம், ஓய்வூதியம், நிரந்தர செலவுகள் உள்ளிட்டவற்றுக்காக செலவிடப்படுகிறது. இவற்றிற்காக இதில் இவற்றிற்காக ஏற்கனவே 300 கோடி ரூபாய் இந்த ஆண்டு செலவிடப்பட்டுள்ள நிலையில், பணப்புழக்கம் முழுவதும் தடைபட்டு உள்ளதால் இந்த சம்பளத்தை மட்டுமே நம்பி வாழும் கோயில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
