"ஆலையை திறக்கலாம்.. ஆனால் அதே சமயம்.." - ஆதரவு கொடுத்த டிரம்ப்!.. “நன்றி மகராசா!” - நெகிழும் எலன் மஸ்க்!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்ஒரு ட்வீட்டால் 3 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பினை இழந்தார் டெஸ்லா நிறுவன அதிபர் எலன் மஸ்க். மேலும் கலிஃபோர்னியாவில் இருந்து தனது டெஸ்லா தொழிற்சாலையினை மாற்றிக்கொள்ளப் போவதாகவும் ட்விட்டரில் எச்சரித்திருந்தார்.
முன்னதாக, கொரோனா காரணமாக தமது டெஸ்லா கார் தயாரிக்கும் தொழிற்சாலையினை இயக்க முடியாமல் இருப்பதாகவும், கொரோனா கட்டுப்பாடுகள் என்கிற பெயரில் ஆளுநரும், அதிபரும், அரசியலமைப்புச் சட்டமும் கூறுவதற்கு மாறாக சுகாதாரத்துறை அதிகாரி செயலாற்றுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே டெஸ்லா நிறுவன பங்குகள் சந்தையில் மிக அதிகமாக இருப்பதாக ட்விட்டரில் கடந்த 1-ஆம் தேதி எலோன் மஸ்க் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து 14 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பங்குச் சந்தையில் டெஸ்லா பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
இதில் எலன் மஸ்க் வசம் மட்டும் இருக்கும் பங்குகளின் மதிப்பு 3 பில்லியன் டாலர்கள் அளவுக்கு குறைந்துள்ளன. இந்த நிலையில்தான், வெறுத்துப் போன எலன் மஸ்க், தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தனது தொழிற்சாலை இயங்க முடியாமல் போவதாகவும், அதனால் தற்போது கலிஃபோர்னியா மாநிலம் ஃபெர்மாண்ட் நகரில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையினை அங்கிருந்து டெக்ஸாசுக்கு மாற்றப் போவதாகவும் தனது ட்விட்டரில் எச்சரித்தார்.
பின்னர் கலிபோர்னியாவில் தான் டெஸ்லா கார் நிறுவன ஆலையை திறக்கவிருப்பதாகவும், யாரேனும் ஒருவர் கைது செய்யப்பட்டால், வரிசையில் நிற்கும் நானாகத்தான் இருப்பேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், அதிபர் டிரம்ப், “கலிபோர்னியாவில் டெஸ்லா ஆலை திறக்கப்படுவதற்கு தடை விலக்கப்படலாம். இப்போது வேகமாகவும்
California should let Tesla & @elonmusk open the plant, NOW. It can be done Fast & Safely!
— Donald J. Trump (@realDonaldTrump) May 12, 2020
பாதுகாப்பாகவும் அதை இயக்கலாம்” என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அதே ட்வீட்டில் எலன் மஸ்க்கும் நன்றி சொல்லியுள்ளார்.