அவ்ளோ 'சீக்கிரம்' விடாது போல... 'பிறப்பிடமான' வுஹான் நகரில்... மீண்டும் 'தலைதூக்கிய' கொரோனா!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் கொரோனா தலைதூக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

உலகில் முதன்முறையாக சீனாவின் வுஹான் நகரில் தான் கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதையடுத்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிய கொரோனா பொருளாதாரத்தை அழித்து உலக மக்களின் வாழ்வை சீர்குலைய செய்து வருகிறது. 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் மருந்து கண்டறியப்படவில்லை என்பதால் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி மட்டுமே தற்போது உலகெங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சீனாவின் வுஹான் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்க ஆரம்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 5 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டதாக அறிவித்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவினை சீனா தளர்த்தியுள்ள நிலையில் மீண்டும் கொரோனா தலைதூக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
