ஹவுசிங் போர்டில் 23 பேருக்கு கொரோனா... கலக்கத்தில் சென்னை குடியிருப்புவாசிகள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அம்மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனாவால் சென்னயில் நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் 4,371 ஆக உள்ளது. இந்நிலையில் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் 23 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஓ.எம்.ஆர்., அருகில் உள்ள, கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கண்ணகி நகரில், பாதிப்பு அதிகரித்து வருகிறது. செம்மஞ்சேரியில், இருவர் பாதித்துள்ளனர்.
இரு குடியிருப்பில், பெரும்பாலான வீடுகள், 170, 200 சதுர அடி பரப்பளவு கொண்டவை. வீடுகளில், சமூக இடைவெளி கடைப்பிடிக்க, போதுமான வசதி இல்லாததால், தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.