RRR Others USA

ஒரே நிமிஷம் யூஸ் பண்ண கேஸ்-க்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் பில் போட்ட அரசு.. ஆடிப்போன தம்பதி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Mar 24, 2022 09:45 PM

இங்கிலாந்தில் ஒரு நிமிடம் உபயோகித்த கேஸ்-க்கு 19,146 கோடி ரூபாய் கட்டணமாக விதிக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழத்தியிருக்கிறது.

couple shocked when they received an energy bill of Rs 19,146 crore

சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு விதிக்கப்பட்ட 144 தடை.. என்ன காரணம்..?

இங்கிலாந்தின் ஹெர்ட்ஸ் அருகே ஹார்ப்பென்டன் பகுதியில் வசித்துவருபவர் சாம் மோட்ராம். இவருடைய மனைவி பெயர் மேடி ராபர்ட்சன். இருவருக்கும் 22 வயதாகிறது. இவர்கள் வருடத்திற்கு கேஸ் மற்றும் மின்சார கட்டணமாக 1,300 பவுண்டுகள் செலுத்துவது வழக்கம். ஆனால், சமீபத்தில் இவர்களுக்கு வந்த கட்டண பில்லை பார்த்ததும் இருவரும் ஷாக் ஆகியிருக்கின்றனர்.

எகிறிய கட்டணம்

ஷெல் நிறுவனத்தின் அப்ளிகேஷனில் இருந்து இவர்களுக்கு கேஸ் கட்டணம் செலுத்துமாறு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் கட்டணமாக 1.9 பில்லியன் யூரோக்களை (இந்திய மதிப்பில் 19,146 கோடி ரூபாய்) செலுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த தம்பதி ஒரே ஒரு நிமிடம் மட்டுமே கேஸ்-ஐ உபயோகித்திருக்கின்றனர்.

The couple was shocked when they received an energy bill of Rs 19,146

இதுகுறித்து சாம் பேசுகையில்," நான் எண்களை தவறாகப் புரிந்துகொண்டேன் எனவும் முட்டாள்தனமாக இருப்பதாகவும் மேடி நினைத்தாள். ஆமாம், அது வேடிக்கையானது. எனது நேரடி டெபிட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்று எனது தொலைபேசியில் அறிவிப்பு வந்தது. அது சற்று வித்தியாசமானது என்று நினைத்தேன். விலைகள் உயரும் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் இதனை எதிர்பார்க்கவில்லை" என்றார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த தம்பதியின் வங்கி கணக்கிலிருந்து பணம் ஏதும் பிடித்தம் செய்யப்படவில்லை. ஒட்டுமொத்த இங்கிலாந்திலும் 15 சதவீத மக்களுக்கு கேஸ் மற்றும் மின்சார கட்டணமாக 12.1 பில்லியன் யூரோக்களே விதிக்கப்படும். இந்நிலையில் சாம் - மேடி தம்பதிக்கு 1.9 பில்லியன் யூரோக்கள் கட்டணமாக விதிக்கப்பட்டது இங்கிலாந்து முழுவதிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

couple shocked when they received an energy bill of Rs 19,146 crore

தவறு

இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நேர்ந்திருப்பதாக ஷெல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்துப் பேசிய ஷெல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்," எங்கள் செயலியில் ஏற்பட்ட தவறு, சில வாடிக்கையாளர்களைப் பாதித்திருக்கிறது. மேலும் சாமும் மேடியும் பிறருக்கு வழங்கப்பட்ட எரிவாயு விநியோகத்திற்கு பணம் செலுத்துவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதே பிரச்சனைகளை சந்தித்த நபர்கள் தங்களது நேரடி டெபிட் பயன்பாட்டில் சிக்கல் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.

இங்கிலாந்தில் இளம் தம்பதிக்கு ஒரு நிமிடம் கேஸ் உபயோகித்ததற்கு கட்டணமாக 19 ஆயிரம் கோடி ரூபாய் கட்டணமாக விதிக்கப்பட்டது குறித்து தற்போது பலரும் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

கண்ணீருடன் ஏலத்துக்கு வந்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு உடைந்துபோன அதிகாரிகள்..!

Tags : #COUPLE #SHOCK #ENERGY BILL #ENGLAND COUPLE #RECEIVE #GAS BILL #இங்கிலாந்து #கேஸ் கட்டணம்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Couple shocked when they received an energy bill of Rs 19,146 crore | World News.