ஒரு சிலந்தியால தலைகீழா புரட்டி போடப்பட்ட வாழ்க்கை.. சின்ன 'சிலந்தி'னு அசால்ட்டா இருந்துட்டேன்.. உருக்கமான வேண்டுகோள் விடுத்த பெண்
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து: சிலந்தி கடித்து மரணத்தின் விளிம்பிற்கு சென்று பெண் ஒருவர் மீண்டு வந்த சம்பவம் லண்டனில் நடந்துள்ளது.
மலை பகுதிகளுக்கு சென்ற சுற்றுலா:
பிரிட்டனில் வசித்து வரும் 38 வயது உடைய Iona McNeil என்ற பெண் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Mexicoவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். McNeil , அங்குள்ள மலை பகுதிகளுக்கு சென்ற நிலையில் அவரை எதிர்பாராதவிதமாக சிறிய சிலந்தி ஒன்று கடித்துள்ளது.
McNeil அப்போது அதுகுறித்து பெரியதாக கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்டார், அதுமட்டுமில்லமல் அவருக்கு அந்த சமயத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சுற்றுலா முடித்து கொண்டு லண்டன் திரும்பி வந்து தன்னுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார் Iona McNeil.
கடித்த இடத்தில் ஏற்பட்ட கொப்பளம்:
அப்போது தான் அவருடைய உடல்நிலையில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அடுத்த நாள் தூங்கி எழுந்த போது சிலந்தி கடித்த இடத்தில் பெரிய கொப்பளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து குமட்டல், வாந்தி, மயக்கம் போன்ற பல அறிகுறிகள் தென்பட்டுள்ளது.
நான்கு நாள் தீவிர சிகிச்சை:
இதனால் அதிர்ச்சியடைந்த Iona McNeil வேறு வழியின்றி மருத்துவரை அணுகியுள்ளார். மருத்துவமனையில் தொடர்ந்து நான்கு நாள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் அவரின் உடல்நிலை தேறாமல் இன்னும் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
உயிர் பிழைத்தது அதிசயம்:
இருப்பினும் மருத்துவர்கள் அவர் உடல் தேறி விடுவார் என உறுதி அளித்துள்ளனர். தற்போது Iona McNeil மருத்துவமனையில் உடல்நிலை முன்னேறி மேல் சிகிச்சை எடுத்து வருகிறார். இதுகுறித்து Iona McNeil கூறும் போது, 'நான் உயிர் பிழைப்பேன் என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை.. சின்ன சிலந்தி என்று யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம்' என அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுவாக வெளிநாடுகளில் சின்ன சின்ன பூச்சிகளுக்கும், சிலந்திகளுக்கும் பயப்படும் விடியோக்கள் எல்லாம் வெளிவரும். இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பயப்படாமல் வேறென்ன செய்வது என பலர் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.