RRR Others USA

கண்ணீருடன் ஏலத்துக்கு வந்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு உடைந்துபோன அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Mar 24, 2022 06:10 PM

சேலத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் கண்ணீருடன் இளம்பெண் ஒருவர் கலந்துகொண்டார். அதற்கான காரணத்தை அவர் தெரிவித்ததும் அனைவரும் நெகிழ்ந்து போயினர்.

Young woman participate in Auction to buy bike belongs to his father

CSK அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தல தோனி.. சின்ன தல ரெய்னா போட்ட ட்வீட்..!

சேலம் மாநகர மற்றும் மாவட்ட மதுவிலக்கு போலீசார் கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்தியவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்திருந்தனர். இந்த வாகனங்களை நேற்று காவல்துறை அதிகாரிகள் ஏலத்தில் விட்டனர்.

ஏலம்

சேலம் மாநகர மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்திருந்த 106 வாகனங்கள் மற்றும் சேலம்  மாவட்ட மதுவிலக்கு போலீசார் கைப்பற்றிய 127 வாகனங்களும் இந்த ஏலத்தில் விற்பனைக்கு வந்தன. இந்த வாகனங்களை வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் இந்த ஏலத்தில் கலந்துகொண்டனர்.

Young woman participate in Auction to buy bike belongs to his father

சேலம் மாநகர மதுவிலக்கு காவல்துறையின் துணை ஆணையர் மாடசாமி தலைமையில் இந்த ஏலம் நடைபெற்றது. அப்போது சேலம் மாவட்டத்தின் உடையாபட்டியை சேர்ந்த சுமதி என்பவர் கண்ணீருடன் கலந்துகொண்டார்.

ஏலம் எடுக்க வேண்டாம்

ஏலத்திற்கு விடப்பட இருந்த இருசக்கர வாகனம் ஒன்றினை யாரும் தயவு செய்து ஏலத்தில் எடுக்க வேண்டாம் என சுமதி அங்கு இருந்தவர்களிடம் கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். அது தன்னுடைய தந்தையின் வாகனம் என்றும் அவரது நியாபகார்த்தமாக அந்த வாகனம் தனக்கு வேண்டும் எனவும் அவர் தெரிவித்தது அங்கு இருந்தவர்களை கலங்க வைத்தது.

Young woman participate in Auction to buy bike belongs to his father

அதன்பிறகு சுமதியின் தந்தையுடைய வாகனம் ஏலத்திற்கு வந்தபோது அதனை 5,500 ரூபாய் கொடுத்து ஏலத்தில் சுமதியே எடுத்தார்.

உருக்கம்

இதுகுறித்து சுமதி பேசுகையில்," மது கடத்தல் வழக்கில் என்னுடைய தந்தையின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் எனது தந்தை மரணமடைந்துவிட்டார். என்னுடைய தந்தையின் நியாபகார்த்தமாக அந்த வாகனத்தை ஏலத்தில் எடுக்க வந்தேன். அப்பாவுடைய வாகனத்தை மீட்கவேண்டும் என எனது சகோதரன் மிகவும் விருப்பப்பட்டார்" என்றார்.

Young woman participate in Auction to buy bike belongs to his father

தனது தந்தையின் வாகனத்தை ஏலத்தில் எடுக்க, நகைகளை அடமானம் வைத்து பணம் திரட்டி வந்ததாக அவர் கூறியது அங்கு இருந்த பலரையும் கண்கலங்க வைத்தது.

கேப்டனை மாற்றிய CSK.. அன்றே கணித்த கவாஸ்கர்..ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!

Tags : #SALEM #YOUNG WOMAN #AUCTION #BUY #BIKE #FATHER #இளம்பெண் #அதிகாரிகள் #ஏலம் #வாகனங்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Young woman participate in Auction to buy bike belongs to his father | Tamil Nadu News.