திருமண நாள் கொண்டாடி ஒரு மாசம் கூட ஆகல.. கணவனை சம்மதிக்க வைக்க விளையாடிய போது நடந்த விபரீதம்.. உடைந்து நொறுங்கிய கணவன்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 13, 2022 12:15 PM

கோட்டயம்:  கேரள மாநிலத்தில் கணவனை சம்மதிக்க வைக்க மனைவி செய்த விஷயம் அவரது உயிருக்கே ஆபத்தாகி விட்டது.

Kerala couple Tragedy less than a month after wedding day

கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த சிங்கவனம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் ஸ்ரீலஷ்மிக்கும்  அவினாஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு அவினாஷ் வேலை கிடைத்து துபாய்க்கு சென்றுள்ளார்.

மனைவியை பார்க்க போகிறோம் என பேரானந்தம்:

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லீவ் கிடைத்து மீண்டும் சொந்த ஊருக்கே வந்துள்ளார். இவ்வளவு நாள் கழித்து மனைவியை பார்க்க போகிறோம் என அவினாஷ் ஆனந்தத்தில் இருந்துள்ளார். தன் மனைவியை பார்த்துக்கொள்வதற்காக அடுத்த மூன்று மாதம் துபாய்க்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளார்.

துபாய்க்கு திரும்புங்கள்:

ஆனால், இது ஸ்ரீலக்ஷ்மி தேவையின்றி விடுப்பு எடுக்காமல் துபாய்க்கு திரும்புங்கள் என அறிவுறுத்தியுள்ளார். அவினாஷ் இதனை கேட்பதாக இல்லை. இதன் காரணமாகவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு விபரீதமானது:

அதோடு தன் கணவரை சம்மதிக்க வைப்பதற்காக கடந்த ஜனவரி 28-ஆம் தேதி ஸ்ரீலக்ஷ்மி தன் வாயில் விஷத்தை ஊற்றிக்கொண்டு, துபாய்க்கு மீண்டும் செல்லவில்லை என்றால் இந்த விஷத்தை குடித்து விடுவேன் என கூறி விளையாட்டாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான அவினாஷ் வேலைக்கு திரும்பி செல்வதாக உறுதியளித்துள்ளார். ஆனால், இந்த விளையாட்டு சம்பவமே தற்போது விபரீதமாக முடிந்து ஸ்ரீலக்ஷ்மியின் உயிரை காவு வாங்கியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி:

வாயில் விஷத்தை ஊற்றியதை சில நொடி கவனிக்காமல் விட்ட ஸ்ரீலக்ஷ்மி அதை தெரியாமல் குடித்துவிட்டுள்ளார். மேலும், அவரது உடல்நிலை மோசமாகி அன்றைய தினமே கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் வரை தொடர் சிகிச்சையில் இருந்த ஸ்ரீலக்ஷ்மி கடந்த பிப்ரவரி 7 அன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிங்கவனம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. உயிரிழந்த ஸ்ரீலக்ஷ்மி கடந்த ஜனவரி 24-ஆம் தேதிதான் தங்களது முதல் திருமணநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #KERALA #COUPLE #TRAGEDY #கேரளா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala couple Tragedy less than a month after wedding day | India News.