முதல் குழந்தை பிறந்து 8 மாசம் தான் ஆச்சு.. அதுக்குள்ள 2-வது குழந்தை.. அது எப்படி சாத்தியம்? பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட காரணம்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 03, 2022 08:14 PM

இங்கிலாந்து: இங்கிலாந்தில் பெண் ஒருவர் எட்டு மாத இடைவேளையில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

UK woman has two children in a row at eight-month intervals

உலகின் மிகப்பெரிய பவர் பேங்க்.. யம்மாடி, இவ்ளோ பெருசா இருக்கு.. வெளிய கொண்டு போக ஒரு குட்டி யானை வேணும் போலையே

பொதுவாக இந்தியாவில் திருமணம் முடிந்த உடன் குழந்தை எப்போது என உறவினர்கள் அழுத்தம் கொடுக்க தொடங்கி விடுவர். குழந்தை பிறப்பதில் உடல் ரீதியான குறைபாடு என்றால் இந்திய சமூகங்களில் அது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக கருதப்படும். அந்த தம்பதியினர் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாவர்கள். சண்டை சச்சரவில் இருந்து பிரிவு வரைக்கும் சென்று விடும்.

குழந்தைக்கு ஏங்கும் பெற்றோர்கள்:

சில இடங்களில் தற்கொலை கூட நடைபெறுகிறது. இன்றைய நவீன உலகில் குழந்தை இல்லை என்னும் தம்பதியினர் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு குழந்தையாவது பிறந்து விடாதா என ஏங்கும் பெற்றோர்கள் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒன்றுக்கு ரெண்டு என அடுத்தடுத்து பிரசவித்த சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

UK woman has two children in a row at eight-month intervals

எட்டு மாத இடைவெளியில் அடுத்த குழந்தை:

இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் லூஸி என்பவருக்கு முதல் குழந்தை பிறந்து எட்டு மாத இடைவெளியில் இரண்டாவது குழந்தையும் பிறந்துள்ளது. 27 வயதான அந்த பெண் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். இந்த நிலையில் குழந்தை பிறந்து 3 மாதங்களாக அவருக்கு மாதவிடாய் ஏற்படவில்லை. இதையடுத்து லூஸி தன்னுடைய மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக வெடிகுண்டை தூக்கி போட்டார்.

இரண்டாவது குழந்தை உடனே பிறந்ததற்கான காரணம்?

இதனையடுத்து அதிர்ச்சியில் மூழ்கிய லூஸி, வேறு வழியில்லாமல் இரண்டாவது குழந்தையை பெற்று கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். முதல் குழந்தை பிறந்த பிறகு இவரும் இவரது கணவருடன் உறவு கொண்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் லூஸி தனது இரண்டாவது குழந்தையை எட்டு மாத இடைவெளியில் அதாவது குறை பிரசவத்தில் பெற்று எடுத்தார்.

முதல் குழந்தை பிறந்த எட்டு மாதத்திலேயே இரண்டாவது குழந்தையை ஒருவர் பெற்றெடுத்த விசித்திர சம்பவம் பலரை ஆச்சரியப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செய்யாத குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை.. 14 ஆண்டுகள் கழித்து தெரிய வந்த 'உண்மை'.. "அடப்பாவி, எல்லாம் பண்ணது நீ தானா?"

Tags : #UK #UK WOMAN #CHILDREN #EIGHT-MONTH INTERVALS #இங்கிலாந்து #குழந்தை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. UK woman has two children in a row at eight-month intervals | World News.