யோவ்.. எனக்கு பசிக்குதுயா.. ஆசையா இருந்தேன், இப்படி சாப்பிட விடாம பண்ணிட்டீங்களே, நல்லா இருப்பீங்களா? கதறும் பெண்
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் சாப்பிட்ட பிரபல பீட்சா கடையின் சிக்கன் பர்கரில் மிகப்பெரிய சிலந்தி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஹோட்டலில் இருந்து உணவுகளை ஆர்டர் செய்து உண்பது வாடிக்கையாகி வருகிறது. இதன் காரணமாக நிறைய ஹோட்டல்கள் தினசரி முளைத்த வண்ணம் உள்ளன. போட்டிப்போட்டு இயங்கும் உணவகங்களில் தெரியாமல் சில தவறுகள் நடக்கவும் செய்கின்றன.
மதிய உணவிற்கு ஆர்டர் செய்த உணவுகள்:
இங்கிலாந்து நாடு பிரித்தானியா பகுதியின் Cheshire கவுண்டியை சேர்ந்தவர் 21 வயதான Katie Moss. இவர் சில நாட்களுக்கு முன் பிரபல பிட்சா நிறுவனத்தின் ஒரு கடையில் இருந்து பன்றி இறைச்சி, சிக்கன், சிப்ஸ் மற்றும் பர்கரை மதிய உணவாக ஆர்டர் செய்து சாப்பிட உட்கார்ந்துள்ளார்.
மிகப்பெரிய சிலந்தி பூச்சி:
கடுமையான பசியில் இருந்த Katie Moss கவரால் சுற்றப்பட்டு அந்த உணவுகளை சாப்பிட தொடங்கினார். அப்போது அவர் உண்ட பர்கரில் 4ல் 3 பங்கு உணவை சாப்பிட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஒரு உணவை கடிக்க சிரமமாக இருந்துள்ளது. இது பர்கர் சிக்கனில் இருக்கும் கீரையாக இருக்கும் என நினைத்து பார்த்த Katieக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் கீரை என நினைத்தது மிக பெரிய அளவிலான சிலந்தி பூச்சியை தான். இந்த சிலந்தி தான் சாப்பிட்ட உணவில் இருந்ததை கண்ட அதிர்ச்சியில் உணவில் இருந்ததை கண்டு மிகவும் வெறுப்படைந்து, பணத்தைத் திரும்ப பெறுவதற்காக அவர் வாங்கிய உணவு நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார் Katie.
'ஆனந்த் மகிந்திரா' வை அசரவைத்த ஆட்டோ டிரைவர்.. நேரில் அழைத்து நெகிழ்ந்து போன டிஜிபி..
மன்னிப்பு கேட்ட உணவு நிறுவனம்:
இதன் காரணமாக தர்ம சங்கடத்திற்கு உள்ளான உணவு நிறுவனம் Katie உணவுக்காக கொடுத்த பணம் அவரிடம் திரும்ப கொடுக்கப்பட்டதாகவும், வேறு உணவு வழங்கப்பட்டதாகவும் கடையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தவறுதலாக சிலந்தி உணவு கவரில் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், Katie தனக்கு மாற்று உணவு மட்டும் போதாது, இழப்பீடு தொகை வேண்டும் என அந்த நிறுவனத்திடம் கோரியுள்ளார். பர்கரில் சிலந்தி இருந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.