வழுக்கை தலையுடன் மகாராணி எலிசபெத் சிலை.. ஏன் முடி இல்லாம சிலைய செய்தோம்னா.. மியூசியத்தின் நிர்வாகி அளித்த விளக்கம்
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனி: ஜெர்மனியில் இருக்கும் அருங்காட்சியகம் ஒன்றில் இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் சிலை வழுக்கையாக வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1962ஆம் ஆண்டு பிறந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தை நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி என்ற பெருமையை கொண்டவர். இவர் கடந்த 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி தன்னுடைய தனது 25 ஆவது வயதில் இங்கிலாந்தின் மகாராணியாக முடிசூட்டிக் கொண்டார்.
இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வமான இல்லமான பக்கிங்ஹாம் அரண்மனையில் மகராணி இரண்டாம் எலிசபெத் வசித்து வருகிறார். சுமார் 775 அறைகள் கொண்ட அந்த அரண்மனையில் அரச குடும்பத்தினருக்காக 52 படுக்கை அறைகள், ஊழியர்களுக்காக 188 படுக்கை அறைகள் உள்ளன. அதோடு, 92 அலுவலக அறைகள் மற்றும் 78 குளியலறைகளும் உள்ளன.
மெழுகு சிலை:
பெரும் ஆட்சி அதிகாரத்தை கொண்டுள்ள இங்கிலாந்து நாட்டின் மகாராணியின் மெழுகு சிலை தற்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மெழுகு சிலை ஜெர்மனியில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஒன்றில் நிறுவப்பட்டுள்ளது.
வழுக்கையாக காணப்படும் தலை:
அந்த சிலையில் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலையை அவரது தொப்பியின் கீழ் வழுக்கையாக வைத்துள்ளனர்.இந்த சிலையை வழுக்கையாக வடிவமைத்தமை தொடர்பில் அருங்காட்சியகத்தின் நிர்வாகப் பங்குதாரரான Susanne Faerber இந்த சர்ச்சை குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.
வழுக்கையாக சிலையை வடிவமைத்தது ஏன்?
இது குறித்து கூறுகையில், 'நாங்கள் பணத்தைச் சேமிப்பதற்காக இவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று. பார்வையாளர்களுக்குத் தெரியும் அளவிலான தலைமுடியினை மட்டுமே நாங்கள் பொருத்தியுள்ளோம். இது ஒரு மெழுகு சிற்பம் தான், உண்மையான நபர் அல்ல, இதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், 'ஜெர்மனியில் அவரது மாட்சிமையின் நிலை, கிரேட் பிரிட்டனில் உள்ள அரச குடும்பத்தை கையாள்வதை விட வித்தியாசமானது, அங்கு பத்திரிகைகள் அவர்களுடன் அதிக உணர்வுடன் கையாள வேண்டும்' எனவும் கூறியுள்ளார்.
இதற்கு முன் இந்த அருங்காட்சியகத்தில் டொனால்ட் டிரம்ப், போப் பெனடிக்ட் XVI, காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் மற்றும் ஜேர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் போன்ற பிரபலங்களின் சிலைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
