ரொம்ப நேரமா தட்டியும் திறக்காத கதவு.."ஜன்னல் வழியா பார்த்தப்போ பகீர்ன்னு ஆயிடுச்சு.." தம்பதியர் எடுத்த 'விபரீத' முடிவு
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை : ரொம்ப நேரமாக வீட்டின் கதவை தம்பதியர்கள் திரைக்கதை நிலையில், ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த உறவினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மதுரை பழைய குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி பெயர் லாவண்யா.
இந்த தம்பதியருக்கு ரக்ஷிதா என்ற மகளும், அர்ஜூன் என்ற மகனும் உள்ளனர். மேலும், நாகராஜன் பங்குச் சந்தை ஆலோசகராகவும், முதலீட்டாளராகவும் இருந்து வந்துள்ளார்.
லட்சக்கணக்கில் பணம்
பங்குச் சந்தையில் அடிக்கடி இருக்கும் ஏற்றம் இரக்கம் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில், நாகராஜன் செயல்பட்டு வந்துள்ளார். இதனால், அதிக லாபமும் பங்கு சந்தை முதலீடு மூலம் அவர் பெற்று வந்துள்ளார். அதே போல, பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு வேண்டி, பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிக்கலில் இருந்த நாகராஜன்
இதனிடையே, உக்ரைன் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் போர் காரணமாக, பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. தொடர்ச்சியாக, அதே நிலை நீடித்ததால், லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருந்த நாகராஜனுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல், தவிப்பில் இருந்து வந்துள்ளார் நாகராஜன். வேறு வழி தெரியாமலும், சிக்கலில் அவர் மாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
குழந்தைகளை அழைக்கவில்லை
இந்நிலையில், தனது குழந்தைகள் இரண்டு பேரும் பள்ளிக்கு சென்றிருந்த நேரத்தில், நாகராஜன் மற்றும் அவரது மனைவி லாவண்யா ஆகியோர், வீட்டில் தனியாக இருந்துள்ளனர். தினந்தோறும் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று, மாலை மீண்டும் அழைத்து வருவதை நாகராஜன் வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், நேற்று மாலை அவர் குழந்தைகளை அழைக்க பள்ளிக்கு செல்லவில்லை.
போன் எடுக்கவில்லை
இதனால், தனியாக பள்ளி வாசலில் காத்திருந்த குழந்தைகளை அவருடைய உறவினர் ஒருவர் சந்தித்து, தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து, நாகராஜன் மற்றும் லாவண்யா ஆகியோரின் தொலைபேசியிலும் அவர் அழைத்து பார்த்துள்ளார். ஆனால், இருவரும் போன் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
திரைக்கதை கதவு
இதனால், சந்தேகம் அடைந்த அந்த உறவினர், மற்ற சில உறவினர்களை அழைத்துக் கொண்டு நேராக நாகராஜனின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால், கதவை நீண்ட நேரமாக தட்டியுள்ளார். ஆனால், யாரும் கதவைத் திறக்கவில்லை.
போலீசார் விசாரணை
அப்போது, ஜன்னல் வழியாக அவர்கள் கண்ட காட்சி, அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. இருவரும் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பின்னர், அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்து, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக இந்த முடிவை நாகராஜன் மற்றும் அவரது மனைவி லாவண்யா எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில், நாகராஜனின் லேப்டாப், மொபைல் போன் மற்றும் இதர பொருட்களையும் போலீசார் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
