சொகுசு பஸ்ஸில் வந்த பார்சல்.. கொரியர் ஆபிஸில் வசமாக சிக்கிய தம்பதி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாட்ஸ் அப் மூலம் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் தம்பதி போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இந்த போதைப்பொருள் பெங்களூருவில் இருந்து சொகுசு பேருந்தில் பார்சல் மூலம் கன்னூருக்கு அனுப்பி வைக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போதைப்பொருள்
இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போதைப்பொருள் பார்சலை வாங்க வந்த தம்பதியை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், முகபிலங்காடு பகுதியை சேர்ந்த அப்சல் மற்றும் அவரது மனைவி பல்கிஸ் ஆகிய இருவரும் போதைப்பொருள் விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.
தம்பதி
இதனைத் தொடர்ந்து தம்பதியிடமிருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவில் ஒரே சமயத்தில் பிடிபட்ட அதிகபட்ச மதிப்புடைய போதைப்பொருள் இதுதான் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து தம்பதியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்
அதில், அப்சல் மற்றும் அவரது மனைவி பல்கிஸ் இருவரும் வாடிக்கையாளர்களிடமிருந்து வாட்ஸ் அப் மூலம் ஆர்டர்களை பெற்று விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தம்பதியை சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
