CSK அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தல தோனி.. சின்ன தல ரெய்னா போட்ட ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுCSK அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிற்கு வழங்குவதாக தோனி அறிவித்திருக்கிறார். இந்நிலையில், டிவிட்டர் வாயிலாக ஜடேஜாவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.
இந்த போன்ல 'Wedding Shoot'-ஆ.?.. குசும்புக்கும் ஒரு அளவில்லையா?.. வைரல் வீடியோ..!
ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. ஐபிஎல்-ன் முதல் தொடரில் இருந்து ஒவ்வொரு அணிக்கும் கேப்டன்கள் மாறிக்கொண்டிருக்க, சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மட்டுமே இருந்து வந்தார். இந்நிலையில், தற்போது அந்த பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிற்கு வழங்கி உள்ளார் தோனி.
ஜடேஜா
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஜடேஜா இதுவரையில் 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 2386 ரன்களை குவித்துள்ளார். பவுலிங்கிலும் மிரட்டும் ஜடேஜா இதுவரையில் ஐபிஎல் தொடரில் 127 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா தற்போது அந்த அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
வாழ்த்திய சுரேஷ் ரெய்னா
இந்நிலையில், முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான சுரேஷ் ரெய்னா, புதிதாக கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜடேஜாவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ரெய்னா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்," சகோதரரை நினைத்தால் திரில்லாக இருக்கிறது. ஜடேஜாவை விட சிறப்பான ஒருவர் அந்த அணியை வழிநடத்த முடியாது. வாழ்த்துக்கள் ஜடேஜா. உங்களின் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளையும் அன்பையும் பூர்த்தி செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் காயம் காரணமாக தோனி விடுப்பில் செல்ல சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்கு தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த தொடரில் 4 போட்டிகளில் ரெய்னா கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களால் 'சின்ன தல' என்று அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருப்பது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
கேப்டனை மாற்றிய CSK.. அன்றே கணித்த கவாஸ்கர்..ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!