வீட்டை கிளீன் பண்ணும்போது கிடச்ச பழைய சூட்கேஸ்.. உள்ள எதோ விளையாட்டு பொருள் இருக்குன்னு நெனச்சோம்.. ஆனா...! சந்தோஷத்தில் திக்குமுக்காடி போன தம்பதி..!
முகப்பு > செய்திகள் > உலகம்வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த பழைய பெட்டியில் லட்சக்கணக்கில் பணம் இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லாண்ட் பகுதியில் தம்பதியினர் வீடு ஒன்றில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டின் தரைத் தளத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர் அப்போது பச்சை நிறத்தில் ஒரு பெட்டியும், சாம்பல் நிறத்தில் ஒரு பெட்டியும் கிடைத்துள்ளது.
முதலில் அதற்குள் விளையாட்டுப் பொருட்கள் ஏதேனும் இருக்கும் என்றே இருவரும் திறந்து பார்த்துள்ளனர். அப்போது பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. இதைக்கண்டு தம்பதியினர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
பச்சை நிற பெட்டியில் சுமார் 23 ஆயிரம் அமெரிக்க டாலர்களும், சாம்பல் நிற பெட்டியில் 45 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் இருந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் ரூபாய் இருக்கும்.
இது குறித்து தெரிவித்த தம்பதியினர், ‘எதிர்பாராத விதமாக இந்த பணம் எங்களுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் எங்களது கடன்களை அடைத்து விடுவோம்’ என உற்சாகமாக கூறியுள்ளார். வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த பழைய பெட்டியால் தம்பதிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

மற்ற செய்திகள்
