"என்னுடைய பெரிய மார்பகங்களை பார்த்து எல்லோரும் கிண்டல் பண்றாங்க" - இளம்பெண் எடுத்த துணிச்சல் முடிவு..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Feb 08, 2022 12:52 PM

பெண்ணின் மார்பகங்களை கவர்ச்சியாக மட்டுமே பார்க்கும் இந்தக் காலத்தில் மார்பகங்கள் காரணமாக பெண்கள் சந்திக்கும் உடல் மற்றும் உளச் சிக்கல்கள் குறித்து யாருமே சிந்திப்பது கூட கிடையாது. பழங்காலத்தில் பிஞ்சுக் குழந்தைகளின் பசியினைப் போக்குவதால் பெண்களின் மார்பகத்தை மிக உயர்ந்ததாகக் கருதினர். ஆனால், அதே மார்பகம் காரணமாக தற்போது பெண்கள் கிண்டலுக்கும் கேலிக்கு உள்ளாகிறார்கள்.

Woman from England seek help for Breast Reduction Surgery

அவர்களில் ஒருவர்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த கார்ட்லி ஸ்மார்ட். நார்தாம்ப்டன்ஷையர் நகரில் வசித்துவரும் இவருடைய வயது 21. அங்குள்ள உணவு விடுதி ஒன்றில் ஸ்மார்ட் பணிபுரிந்துவருகிறார்.

கார்லியின் மார்பக அளவு 36 அங்குலமாக இருந்திருக்கிறது. இது அவரது வயது, உயரம் மற்றும் எடையுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரியது. இந்த மார்பகங்கள் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் சில நேரங்களில் தனக்கு முதுகுத் தண்டில் வலி ஏற்படுவதாகவும் கார்லி சோகத்துடன் குறிப்பிடுகிறார்.

Woman from England seek help for Breast Reduction Surgery

கிண்டல், கேலி..

உணவுகளை பரிமாறும் வேளைகளில் அவருடைய மார்பகங்களில் அடிபடுவதை பலரும் கிண்டல் செய்திருப்பதாகவும், "உன் மார்பகம் பட்டு கண்ணாடி உடைந்துவிடப் போகிறது" என சக பணியாளர்கள் கேலி செய்கையில் தனக்கு மிக அவமானமாக இருக்கும் என கார்லி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்," என்னுடைய மார்பகங்களின் எடை 9 கிலோ. இதனால் நான் பல கிண்டல்களை எதிர்கொண்டிருக்கிறேன். மார்பகங்களின் அளவு காரணமாக ப்ரா அணிவது காயங்களை ஏற்படுத்துகிறது. மார்பகங்களுக்கு கீழே ஏற்பட்டுள்ள காயங்களை பார்க்கும்போது சிக்கன் குனியா தாக்கியதைப்போல உணர்கிறேன்" என்கிறார்.

Woman from England seek help for Breast Reduction Surgery

அறுவை சிகிச்சை

தன்னுடைய உடல் நலம் மற்றும் மன நலத்தை கருத்தில்கொண்டு மார்பகங்களை சிறிதாக்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார் கார்லி. இருப்பினும், இவருடைய BMI (Body mass index) 25க்கும் குறைவாக இருந்ததால் அவருடைய அறுவை சிகிச்சை கோரிக்கையை பிரிட்டன் தேசிய சுகாதார சேவை நிராகரித்துவிட்டது.

ஆனாலும், கிரவுட் பண்டிங் எனப்படும் மக்களிடம் பண உதவி பெற்று மார்பக அறுவை சிகிச்சையை மேற்கொள்ள நிதி திரட்டி வருகிறார் கார்லி. பெரிய மார்பகங்களை பார்த்து கிண்டல் செய்பவர்களுக்கு என்னுடைய வலிகள் புரிவதில்லை என அவர் சொல்வது மனிதத்தை உலுக்கும் சொற்களாக உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.

Tags : #BREAST #ENGLAND #CARLYSMART #மார்பகங்கள் #இங்கிலாந்து #கார்லிஸ்மார்ட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman from England seek help for Breast Reduction Surgery | World News.