புயல் வீசிட்டு இருந்தப்போ.. வானத்துல இருந்து ஏதோ என்மேல விழுந்த மாதிரி இருந்துச்சு.. எடுத்து பார்த்த உடனேயே.. இங்கிலாந்து நபர் எடுத்த முடிவு
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து: இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் புயலின் போது வானத்தில் இருந்து விழுந்த பூச்சி தன் பிள்ளைகளுக்கு பிடித்துவிட்டது என எடுத்த முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

இங்கிலாந்து நகரில் ஏற்பட்ட Eunice புயலின்போது, போட்டர் (38 வயது) என்பவர் தன் தோட்டத்தில் இருந்துள்ளார். அப்போது அவரின் தோள் மீது 6 அங்குல நீளமுடைய உயிரினம் ஒன்று விழுந்திருக்கிறது.
புயல் காற்றில் பறந்து வந்த உயிரினம்:
பறவைகள், தான் சாப்பிட எடுத்து சென்ற பூச்சியை பறக்கும் போது கீழே போட்டிருக்கும் என நினைத்துள்ளார் போட்டர். ஆனால் அந்த நேரத்தில் அங்கே பறவைகள் எதையும் காணோம். ஒருவேளை புயல் காற்றில் கூட இந்த உயிரினம் பறந்து வந்து விழுந்திருக்கலாம் என நினைத்துள்ளார்.
கண்ணாடி பாத்திரத்தில் வளர்ப்பு:
விழுந்தது விழுந்து போனது, இவ்வளவு பெரியதாக உள்ளதே அது என்ன பூச்சி என்று பார்க்க, அதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போட்டிருக்கிறார். தண்ணீருக்குள் போட்ட உடனே அந்த பூச்சி நகரத் துவங்கியுள்ளது.
இரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சி:
அப்போது அதை உற்றுப் பார்த்த போட்டர் அதனை ஒரு இரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சி என தெரிந்துகொண்டுள்ளார். அப்படியென்றால் இது கண்டிப்பாக, எங்கோ உள்ள ஒரு நதியிலிருந்து அந்தப் பூச்சியை புயல் காற்று தூக்கிக்கொண்டு வந்திருக்கும் என கூறி வருகிறார். எங்கிருந்தோ நம்மை தேடி வந்துள்ளது. அதை எதற்கு வெளியே துரத்த வேண்டும். எனவே அதை நாமே வளர்க்கலாம் என முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் போட்டரின் 12 மற்றும் 13 வயதுள்ள மகன்களுக்கு இந்த அட்டைப்பூச்சி பிடித்து போய்விட்டது அதன்காரணமாக அந்த அட்டைப்பூச்சியை ஒரு கண்ணாடிப் பாத்திரத்திலேயே போட்டு வைத்திருக்கிறார். ஆனால், அது அவரது மனைவிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
