பீதியை கிளப்பும் 'கொரோனா' வைரஸ்... தமிழகத்தில் தீவிர கண்காணிப்பில் '51 பேர்'... "இது எப்ப நடந்தது..."
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் எதிரொலியால் சீனாவில் இருந்து தமிழகம் திரும்பி உள்ள 51 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதகரித்திருப்பதையடுத்து, அங்குள்ள இந்தியர்கள் நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை திரும்ப அழைத்து வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. இந்த நிலையில் சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இது வரை நாடு திரும்பியவர்களில் 450 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை சமீபத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர், சென்னையைச் சேர்ந்த ஒருவர் என 8 பேர் சீனாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தனர்.
இவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். 28 நாட்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என்றாலும் இவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை. சீனாவில் இருந்து இது வரை தமிழ்நாட்டுக்கு 51 பேர் திரும்பி உள்ளதாகவும் அவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறுகையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 51 பேர் வீட்டுக்கும் காலை, மாலை மருத்துவ பணியாளர்கள் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள் என்றும், 51 பேரும் 28 நாட்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
