"அசுர வேகத்தில் டிஜிட்டல் மயமாகும் இந்தியா!"... "அமெரிக்காவை முந்தியது!"...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jan 27, 2020 06:54 PM

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அமெரிக்காவை, இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.

india beats america in smart phone market secures second place

2019ம் ஆண்டில், இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை 7 சதவிகித வளர்ச்சியை எட்டியதுடன், 158 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த சர்வதேச ஸ்மார்ட் போன் சந்தையில், முதலிடத்தில் சீனாவும், இரண்டாமிடத்தில் இந்தியாவும் உள்ளது. முன்பாக, இரண்டாவது இடத்தில் அமெரிக்கா இருந்து வந்தது.

2019ம் ஆண்டு ஆய்வின் அடிப்படையில், மொத்த சந்தை மதிப்பில் 28 சதவிகித பங்கை ஜியோமி நிறுவனம் கொண்டுள்ளது. இரண்டாம் இடத்தில் சாம்சங் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் விவோ நிறுவனமும் உள்ளன. சாம்சங் சந்தைப் பங்கு 21 சதவிகிதம் மற்றும் விவோ நிறுவனத்தின் பங்கு 16 சதவிகிதமாகவும் உள்ளது.

Tags : #SMARTPHONE #INDIA #CHINA #USA