‘இதுவரை 41 பேர் பலி’.. ‘தீயாய் பரவும் கொரனோ வைரஸ்’ .. 6 நாளில் 1000 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல் கட்டும் சீனா..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jan 25, 2020 05:38 PM

சீனாவில் கொரனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்ட முடிவெடுத்துள்ளது.

China builds 1000 bed hospital for Coronavirus affected people

சீனாவில் கொரனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதலில் வுஹான் என்ற நகரத்தில் இருந்துதான் இந்த வைரஸ் பரவத் தொடங்கியது. இதனை அடுத்து ஹூபே, குவாங்கங், செஜியாங், குவாங்டாங், ஜியாங்சி ஆகிய நகரங்களில் பரவியுள்ளது. இதனால் சுமார் 3 கோடி பேர் வெளி உலகுடனான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வைரஸ் தாக்குதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக ஒரு மருத்துவமனையை சீன அரசு கட்டி வருகிறது. சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் படி, 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை 6 நாட்களில் கட்டிமுடித்து பிப்ரவரி 3ம் தேதி பயன்பாட்டுக்கு கொண்டுவர அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக 100 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். இந்த மருத்துவமனை Prefabricated building என்ற முறையில் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொருத்தவரை கொரனோ வைரஸ் பாதிப்பு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONAVIRUS #CHINA #HOSPITAL