“அசைவத்தால் பரவும் கொரோனா வைரஸ்!” .. “2 மணி நேரம்தான் இருக்கு!”.. “பதறும் இந்திய மாணவர்!”.. பதட்டத்தின் உச்சத்தில் வுஹான்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jan 29, 2020 02:08 PM

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்குதல் அதிகமாக இருப்பதால் இதுவரை 106 பேர் இறந்துள்ளதாகவும், 4,500 பேர் பாதிப்புக்குள்ளாகியதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன. மேலும் வேகமாக பரவி வரும் இந்த வைரஸால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். சீனாவில் வசிக்கும் பிற நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இந்நிலையில் சீனாவில் வசிக்கும் இந்தியர்கள் யாருக்கும் இதுவரை பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று இந்திய வெளியறவுத் துறை உறுதி செய்துள்ளது.

coronavirus warning in china wuhan town, status of indians

அதுமட்டுமல்லாமல் சீனாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு என்று இருக்கும் ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பில் மாணவர்கள், வேலை பார்ப்பவர்கள், வர்த்தகம் செய்பவர்கள் என பலரும் உள்ளனர். இந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் வந்த தகவல்களின் அடிப்படையில் இந்தியர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிகிறது. எனினும் நோயின் தீவிரம் அதிகரித்துள்ளதால் சீனாவில் போக்குவரத்து மற்றும் குழுவாக இயங்குதல் போன்ற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தனிநபர் சுகாதாரத்தை பேண வலியுறுத்தி, வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாய் இருக்க சீன அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் ரூபன் தெரிவித்துள்ளார். பொங்கல் விடுமுறைக்காக புதுச்சேரி வந்திருக்கும் அவருக்கு தற்போது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது

மேலும் இதுபற்றி தெரிவித்துள்ள ரூபன், கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு வந்திருக்கலாம் என்கிற சந்தேகம் நிலவுவதால் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதற்கு  சீன மக்கள் மத்தியில் அச்சம் பெருகியுள்ளதாகவும், அங்கு உள்ள ஷாப்பிங் மால்களில் எல்லாம் பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகள், உயிரினங்கள் உயிருடன் இருப்பதாகவும், பாம்புகளும் விலங்குகளும் கூட உணவாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த நோயினால் தற்போது அசைவ உணவுகள் மற்றும் உயிருடன் இருக்கும் விலங்குகள் உள்ளிட்டவற்றின் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவற்றை அதிகமாக விநியோகிக்கும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரூபன் கூறுகிறார். தவிர சீன அரசு மக்களிடம் அசைவுடன் பயன்பாட்டை குறைக்கும்படி நேரடியான அறிவிப்புகளை வெளியிடவில்லை என்றாலும் சைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதோடு சீனாவின் வுஹான் நகரில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் அஸ்ஸாமைச் சேர்ந்த 22 வயதான மாணவர், கௌரவ், வுஹான் நகரில் வைரஸ் வேகமாக பரவி வருவதால், தங்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளதாகவும், இதனால் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப் படுவதாகவும் ஆனால் நகரின் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாததாலும், போக்குவரத்து வசதிகள் மூடப்பட்டுள்ளதாலும், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை அதிக அளவில் ஏற்பட்டதாகவும், இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த வசதிகளும் தீர்ந்துவிடும் என்றும் அவர் இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

Tags : #CHINA #CORONOVIRUS #CORONAVIRUS