VIDEO: "கொரோனா வைரஸுக்கு சவால் விடும் சென்னை மருத்துவர்!"... "மருந்தை ஆய்வு செய்யவிருக்கும் சுகாதாரத்துறை!!"... "அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பால் பரபரப்பு!"...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல உயிர்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வழி தெரியாமால் சீனா தவித்து வரும் நிலையில், அந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழ்நாட்டை சேர்ந்த சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள மருந்தை ஆய்வுக்கு அனுப்பி வைக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனா என்னும் வைரஸால், ஆசிய கண்டத்தின் சக்தி வாய்ந்த வல்லரசாக விளங்கும் சீனா நிலைகுலைந்து போயுள்ளது. அதனைக் கட்டுப்படுத்தும் முறையை சீனா இன்னும் கண்டறியாத நிலையில், சென்னை அருகம்பாக்கத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருதணிகாசலம் என்பவர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்தை தான் கண்டுபிடித்துள்ளாதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சித்த மருத்துவர் திருதணிகாசலம், நம் Behindwoods-க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், தான் கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துள்ளதாகவும், உலக சுகாதார நிறுவனமும், சீன அரசும் அனுமதித்தால், வுகான் நகருக்குச் சென்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அந்த மருந்தை ஆய்வு செய்து, அந்த மருந்தால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இயலுமா என்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை, சுகாதாரத்துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
சென்னை மருத்துவரின் இந்த மருந்து, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இயலும் என்று நிரூபனமானால், உலக அரங்கில் தமிழனின் பெருமை ஓங்கி ஒலிக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
