'கொரோனா' பாதிப்பால்... முன்னாள் 'கிரிக்கெட்' வீரர் 'உயிரிழப்பு'... 'சோகத்தை' ஏற்படுத்தியுள்ள சம்பவம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 14, 2020 04:39 PM

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

Former Pakistan Cricketer Zafar Sarfaraz Dies Due To Coronavirus

சீனாவின் வுஹான் நகரில் முதல்முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இதுவரை வைரஸ் பாதிப்பால் 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் (50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 1988ஆம் ஆண்டு தொழில்முறை கிரிக்கெட்டில் அறிமுகமான இடக்கை பேட்மேனான சர்ஃபராஸ் 15 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 616 ரன்கள் எடுத்துள்ளார். 6 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார். 1994ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர் அதன்பிறகு பயிற்சியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.