'மலிவு விலை' கொரோனா 'பரிசோதனை'... 'ஒரு மணி' நேரத்தில் 'துல்லியமான முடிவு...' பரிசோதனைக்கு வைத்த 'பெயர் தான் ஹைலைட்டே...!'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 23, 2020 12:52 PM

குறைந்த விலையிலான, 'கொரோனா' பரிசோதனை முறையை, சி.எஸ்.ஐ.ஆர்., அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு, பிரபல, துப்பறியும் கதாபாத்திரமான ஃபெலுடாவின் (Feluda) பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Indian researchers invent a low-cost, corona test system

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும், அதற்கான மருத்துவ பரிசோதனைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. ஒருவருக்கு முழுமையாக பரிசோதனை செய்ய 4 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான பரிசோதனை கிட் தேவைப்படுகிறது.

இந்நிலையில், குறைந்த விலையிலான கொரோனா பரிசோதனையை, சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில் கண்டுபிடித்து உள்ளது.

மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பெர்க்லி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இது போன்ற ஒரு பரிசோதனைகளுக்கு, 'டிடெக்டர் ஷெர்லாக்' என, பெயரிட்டு உள்ளனர்.

அதேபோல், நமது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பரிசோதனை முறைக்கு, பிரபல, துப்பறியும் கதாபாத்திரமான ஃபெலுடாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது, சத்யஜித் ரே கதைகளில் வரும் துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் கிருமியை கண்டறியும் இந்த முறையில், விலைஉயர்ந்த இயந்திரங்கள் தேவைப்படாது. இந்த பரிசோதனையை, ஒரு மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் முடித்துவிடலாம் என மையத்தின் இயக்குனர் அனுராஜ் அகர்வால் கூறியுள்ளார்.