கொரோனாவின் சித்து விளையாட்டை அம்பலப்படுத்திய விஞ்ஞானிகள்!.. தடுப்பூசிகளுக்கு அடங்காமல் இருப்பது ஏன்?.. வெளியான பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | May 13, 2020 07:23 PM

மனித உடலுக்குள் சென்றதும் தடுப்பூசி போட்டிருந்தால், கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றி கொள்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

scientists say covid19 virus mutates and adapts to vaccines

வாய், மூக்கு மற்றும் கண்களின் வழியாக மனித உடலுக்குள் நுழையும் கொரோனா வைரஸ், ஸ்பைக் என்று அழைக்கப்படும் கொக்கி போன்ற புரதத்தின் மூலம் மனித செல்களோடு இணைகிறது. இந்த இணைவு வெற்றிகரமாக நடந்தவுடன், வைரஸ் தனது மரபணுவை மனித செல்களுக்குள் புகுத்தும். மனித செல்களுக்குள் நுழையும், கொரோனாவின் மரபணு, அந்த செல்லை வைரசின் இனப்பெருக்க தளமாக மாற்றுகிறது. இப்போது பாதிக்கப்பட்ட செல், ஒரு வைரசாகவே மாறி, பல்கிப்பெருகிறது.

பொதுவாக வைரசுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பு மருந்து, வைரசின் ஸ்பைக் புரதம் குறித்த தகவலை உடலுக்கு அளிக்கிறது. அதனால், தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் உடலுக்குள் வைரஸ் நுழையும் போது ஸ்பைக் புரதத்தை அடையாளம் கண்டு, மனித செல்கள் அதனுடன் இணைவதை தவிர்க்கின்றன. ஆனால், கொரோனா வைரசின் இந்த ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொள்வதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால், உருமாற்றம் நடைபெறாத வைரஸ்களுக்கு எதிராக மட்டுமே தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் நிலை ஏற்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தடுப்பு மருந்துகள் தயாரிப்பவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனோ வைரசில் ஏற்படும் மரபணு மாற்றங்களையும் கருத்தில்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.