"இது அவருடைய இடம்!"... "நாங்கள் யாரும் அமரமாட்டோம்"... "தோனி குறித்து சாஹலின் நெகிழ்ச்சி வீடியோ"...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து சுழற்பந்துவீச்சாளர் சாஹல் உருக்கமான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பின், தோனி எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்திய அணி தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் விளையாடி வந்தாலும், எந்த தொடரிலும் அவர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் பயணம் செய்யும் பேருந்தில், அனைவரிடமும் களகளப்பாக பேசிய சாஹல், தோனி பற்றியும் பேசியுள்ளார்.
பிசிசிஐ பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஒவ்வொரு வீரரிடமும் சென்று சாஹல் பேசுகிறார். இறுதியாக, பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்ற அவர், "பேருந்தின் கடைசி ஓர இருக்கையில் நாங்கள் யாரும் அமரமாட்டோம். அது தோனியின் இடம். அந்த இடம் அவருக்கானது. நாங்கள் தோனியை மிஸ் பண்றோம்", என்று கூறியிருக்கிறார்.
தோனி குறித்த சாஹலின் இந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.
MUST WATCH: We get you Chahal TV from the Bus! 🚌
This one is en route from Auckland to Hamilton 😎😎 - by @RajalArora @yuzi_chahal #TeamIndia
Full Video here ➡️➡️ https://t.co/4jIRkRitRh pic.twitter.com/ZJxMtRGsQu
— BCCI (@BCCI) January 27, 2020
