'அய்யோ!! அம்மா!!' காப்பாத்துங்க.... அலறிய குழந்தையால் பதறிய தாய்.... மனதை பதறவைத்த 'மீட்பு நடவடிக்கை'...
முகப்பு > செய்திகள் > உலகம்By Suriyaraj | Jan 07, 2020 10:40 AM
சீனாவில் எதிர்பாராத விதமாக பாத்திரத்திற்குள் தலையைவிட்டு சிக்கிக் கொண்ட குழந்தையை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று அங்கிருந்த பாத்திரம் ஒன்றினுள் தலையை விட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக தலை முழுவதும் பாத்திரத்தின் உள்ளே சிக்கிக் கொண்டது. குழந்தை எவ்வளவோ முயன்றும் பாத்திரத்திற்குள் இருந்து தலையை எடுக்க முடியாததால் சிறிது நேரத்தில் அலற ஆரம்பித்தது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பதறிப்போய் ஓடி வந்த தாய் குழந்தையின் தலையை பாத்திரத்திற்குள் இருந்து மீட்க போராடினார். ஆனால், அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த மீட்புப் படையினர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பாத்திரத்தை அறுத்து குழந்தையைக் காப்பாற்ற முடிவு செய்தனர். குழந்தைக்கு காயம் ஏற்படாமல் லாவகமாக செயல்பட்ட மீட்புப் படையினர் சிறிது சிறிதாக பாத்திரத்தின் மேல் பகுதியை அறுத்தனர்.
குழந்தை பயந்து விடாமல் இருக்க குழந்தையின் தாய் சமாதானம் சொல்லியபடி இருந்தார். இறுதியில் பாத்திரத்தின் மேல் பகுதி முழுவதுமாக அறுக்கப்பட்டு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. சில மணி நேரங்கள் நடைபெற்ற இந்த மீட்பு நடவடிக்கைகள் மனதை பதற வைப்பதாக இருந்தது.