‘இவங்க’ எல்லாம் ‘இல்லாம’ எப்படி?... மத்திய அரசின் ‘திடீர்’ அறிவிப்பால்... ‘ஐபிஎல்’ போட்டிகளுக்கு எழுந்துள்ள ‘புதிய’ சிக்கல்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Mar 12, 2020 01:12 PM

இந்தியாவிற்கு வர வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

CoronaVirus IPL 2020  Foreign Players Not Available Due To Visa

சீனாவின் வுஹான் நகரத்தில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது சந்தேகமாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளைக் காண வரும் ரசிகர் கூட்டத்தில் யாரேனும் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தால் கூட எளிதில் அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது என்பதால் பலரும் போட்டிகளை நடத்தவேண்டாமென குரல் கொடுத்து வருகின்றனர்.

இதையடுத்து தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக இந்தியாவிற்கு வர வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் மார்ச் 13 முதல் ஏப்ரல் 15 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ள வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியா வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்பதால் வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வந்தாலும் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 14ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்திற்குப் பின்னரே போட்டி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

 

 

Tags : #IPL #CHENNAI-SUPER-KINGS #CSK #MSDHONI #CORONAVIRUS #FOREIGNPLAYERS #VISA