‘என்ன நடந்தாலும் ஊருக்கு போக மாட்டேன்..’. ‘இது என் வாழ்கையில எடுத்த தைரியமான முடிவு...’ சீனாவில் தொடர்ந்து படிக்க விரும்பும் சிங்கப் பெண்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளத்தை சேர்த்த பெண் இந்தியா திரும்ப உதவி செய்தும் தன் பட்ட படிப்பினை கருத்தில் கொண்டு, தனக்கு சீனாவிலிருந்து வர விருப்பம் இல்லை என்று கூறியுள்ள செய்தி அவரது குடும்பத்தாருக்கும், கேரள மக்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் பண்டலம் பகுதியை சேர்ந்தவர் அனிலா அஜயன். 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் சீன அறிவியல் அகாடமியின் கீழ் செயல்படும் ஹைட்ரோபையாலஜி கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளச் சென்றிருக்கிறார்.
பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய காலகட்டத்தில் இந்திய அரசாங்கம் சீனாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தது. ஆனால் உஹான் மாகாணத்திலிருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் அனிலா பயணிக்கவில்லை.
இதுகுறித்து அவர் தற்போது கூறியுள்ள விஷயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “என்ன நடந்தாலும் திரும்பிச் செல்லக்கூடாது என்று உறுதியாக முடிவு செய்தேன். நாடு திரும்பினால், அங்கேயும் நானும் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தி வைக்கப்படுவோம். எனவே, என் வாழ்க்கையிலேயே நான் எடுத்த மிக தைரியமான முடிவாக இதை பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அனிலாவுடன் தங்கியிருந்த அவரது தோழி நூர், தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துவிட்டு, கடந்த ஜனவரி மாத இறுதியில் பாகிஸ்தானுக்குத் திரும்ப திட்டமிட்டிருந்தார். அவரது விசாவும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைய இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், வைரஸ் பரவும் ஆபத்து நீங்கும் வரை நூர் சீனாவிலேயே தங்கும் வாய்ப்பு அமைந்தது. அவர் விசா இல்லாமலே தங்கலாம் என்றும் அதற்கு அபராதமும் செலுத்தத் தேவையில்லை என்றும் சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், நூரும் பாகிஸ்தானுக்குச் செல்லாமல் உஹானிலேயே தன்னுடன் தங்கியுள்ளார் என்று தெரிவித்தார்.
நூர் தனக்கு தேவையான எல்லா விதமான உதவிகளையும் செய்துவருவதாகவும், எங்கள் நட்பு இன்னும் உறுதியுடன் நீண்ட நாட்களுக்கு நிலைத்துநிற்கும் எனவும் அனிலா கூறுகிறார். மேலும் இங்கு நிறைய இளைஞர்கள் மூகமூடி உள்ளிட்ட பாதுகாப்புக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுவந்து விநியோகிப்பதாவும், தங்களுக்கு எந்தவித அபாயமும் நிகழாது என நம்பிக்கையுடன் சொல்கிறார்.
தற்போது சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருவதாகவும், விரைவில் முழுவதுமாக நிலைமை சரி செய்யப்படும் எனவும் நம்பிக்கையோடு தெரிவித்தார்.
