‘இத’ மட்டும் பண்ணினா ‘கடும்’ நடவடிக்கை... அதிகரித்து வரும் ‘கொரோனா’ பாதிப்பால்... ‘எச்சரித்துள்ள’ சுகாதாரத்துறை அமைச்சர்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 11, 2020 01:56 PM

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தகவலையும் மறைப்பது குற்றமாக கருதப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறியுள்ளார்.

Corona Virus Hiding Travel History A Crime Says Kerala

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, “கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ சென்று திரும்பியவர்கள் அந்தத் தகவலை சுகாதாரத்துறையிடம் முறையாக தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்கவில்லை என்றால் அது குற்றமாக கருதப்படும்.

பயணத்தின் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய விவரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் பயண விவரங்களை மறைப்பது குற்றமாக கருதப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் கேரளாவில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட ஒரு குடும்பத்தினர் இத்தாலியில் இருந்து திரும்பியதை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags : #KERALA #CORONAVIRUS #TRAVEL #HISTORY #HEALTHMINISTER