'அங்க' தான் பிளான் பண்ணாம 'தோத்தீங்க' இங்கேயுமா?... 'தாறுமாறாக' வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 12, 2020 06:04 PM

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டு இருக்கிறது.

IND Vs SA: 1st ODI abandoned due to Rain, Twitter Reacts

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி தரம்சாலாவில் இன்று மதியம் 1.30 மணிக்கு முதல் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக டாஸ் போட முடியவில்லை. இதையடுத்து மாலை 6.30 மணிக்கு போட்டி 20-20 ஆக இந்த போட்டி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்தது.

ஆனால் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியதால் தரம்சாலா மைதானம் நீச்சல்குளம் போல மாறியது. இதையடுத்து இன்றைய போட்டி கைவிடப்படுவதாக பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. இதைக்கண்ட ரசிகர்கள் தரம்சாலாவில் கடந்த 1 வாரமாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்தும் போட்டியை ஏன் அங்கே வைத்தீர்கள்? என கண்டபடி கேள்வி கேட்டு பிசிசியை விமர்சனம் செய்து வருகின்றனர்.