'சுத்தி சுத்தி தங்களுக்குள்ளயே திருமணம் செய்துகொண்ட 11 பேர்'.. ‘விவாகரத்து மட்டும் 23 முறை’... 'பதற வைத்த சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 25, 2019 11:09 PM

சீனாவில் திருமணம் செய்யும் குறிப்பிட்ட வரம்புக்குள் வரும் சில சமூக மக்களுக்கு, அரசு சார்பில் 40 சதுர மீட்டர் பரப்பளவுள்ள அபார்ட்மெண்ட் தரப்ப்படும் திட்டம் அமலில் உள்ளது.

chinese family marries relatives and does divorce 23 times

சீனாவின் கிழக்கு ஸெய்ஜிங் பகுதியில் அபார்ட்மெண்ட்களும் அடுக்கு மாடிகளும், திருமணம் செய்பவர்களுக்கு தரப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர், தங்களுக்குள் வெவ்வேறு நபர்களை, வெவ்வேறு நேரங்களில் திருமணம் செய்துகொண்டும், 23 முறை விவாகரத்து பெற்றுக்கொண்டும் அவற்றை 11 திருமணங்களாக கணக்கு காட்டியுள்ளனர்.

இவர்களுள் யாரும் உடன்பிறந்த உறவுமுறைகளை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றபோதிலும், வெவ்வேறு நேரங்களில் திருமணம் செய்துகொண்டு அந்த திருமணச் சான்றிதழ்களையும், திருமணம் செய்துகொண்டவரையே விவாகரத்து செய்தும், ஏற்கனவே திருமணம் செய்தவரை மீண்டும் மணம் செய்துகொண்டும் அவற்றுக்கான சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.

இந்த சான்றிதழ்களை ஆவணங்களாக வைத்து, அரசு கொடுக்கும் அபார்ட்மெண்ட்டுகளை வாங்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தச் செய்தியை குளோபல் டைம்ஸ் இதழ் பிரசுரித்த பின்பு, போலீஸார் இதுகுறித்த விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

Tags : #MARRIAGE #DIVORCE