"எது 6 லட்சம் பேரா?..." "84 ஆயிரம் தான் சொல்லுச்சு சீனா..." "அப்போ எல்லாம் போங்கா?..." "எதை தான் நம்புறது?..."

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 19, 2020 10:13 AM

சீனாவில் கொரோனாவால் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சீனா உண்மையை உலக நாடுகளிடமிருந்து மறைத்து விட்டதாக கூறப்படுகிறது.

640,000 people have been affected by corona in China

கொரோனா பாதிப்பு பற்றிய சரியான தகவல்களை வெளியிடாமல் சீனா மறைப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி சீனாவில் கொரோனாவால் 84 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 4,673 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள தேசிய ராணுவ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவர தகவல்கள் ரகசியமான கசிந்து உள்ளன. அந்த தகவல்களை நிபுணர்கள் ஆய்வு செய்ததன் மூலம், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரமாக இருக்கலாம் என்று தெரியவந்து உள்ளது.

84 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக சீன அரசு கூறி இருக்கும் நிலையில், அந்த நாட்டு ராணுவம் நடத்தும் பல்கலைக் கழகத்தின் தகவல்கள் மூலம், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரம் என்று தெரியவந்து இருப்பதால், கொரோனா பாதிப்பு பற்றிய உண்மைகளை சீனா மறைப்பதாக கருதப்படுகிறது.

மருத்துவமனைகள், குடியிருப்பு வளாகங்கள், ஓட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், உணவு விடுதிகள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய தகவல் பற்றி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இப்படி ஒரு புதிய புள்ளிவிவரம் வெளியானது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.