பலி எண்ணிக்கை 171 ஆக உயர்வு!... பிரிட்டன் அரசை 'சட்டத்திருத்தம்' செய்ய வைக்கும் 'கொரோனா'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Mar 18, 2020 01:48 PM

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்போவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

britain to amend laws inorder to fight coronavirus

பிரிட்டனில் கொரோனா தாக்குதலால் தேங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை மீட்க 330 மில்லியன் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய்) ஊக்கத் தொகையை அந்நாட்டு நிதியமைச்சர் ரிஷி சுனாக் அறிவித்துள்ளார்.

தொழில் நிறுவனங்களுக்கான கடன் உள்ளிட்ட வழிகளில் இந்நிதி செலவிடப்படும் என ரிஷி சுனாக் குறிப்பிட்டுள்ளார். சுகாதார மற்றும் ஆரோக்கிய ரீதியில் மட்டுமின்றி பொருளாதாரத்தையும் கொரோனா வெகுவாக பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் போர் தவிர்த்த மற்ற காலங்களில் இது போன்ற பொருளாதார பாதிப்பை தங்கள் நாடு சந்திப்பது இதுவே முதல்முறை என்றும் கூறியுள்ளார். மக்களின் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் உறுதி செய்ய இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் அவர் பதிவிட்டார்.

இந்நிலையில், கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரியுடனான போரை பிரிட்டன் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் நாளை சிறப்பு சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கொரோனாவின் கோரத் தாக்குதலால் பிரிட்டனில் இதுவரை 171 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #CORONAVIRUS #BRITAIN #LAW #AMENDMENT