'விடாது துரத்திய 'கொரோனா'... 'பூட்டிய வீட்டுக்குள்ள தனியா இருக்கேன்'... பிரபல நடிகையின் சோக பதிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Mar 17, 2020 04:20 PM

கொரோனா பாதித்ததால் தான் பூட்டிய வீட்டிற்குள் இருப்பதாக ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்த பிரபல நடிகை ஒல்கா கரிலேங்கா, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

Olga Kurylenko says she tested positive for coronavirus

மாடலிங் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஒல்கா, கடந்த 2005-ம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து 2008-ம் ஆண்டு வெளியான ஜேம்ஸ்பாண்ட் படமான குவாண்டம் ஆஃப் சோலஸில் ஹீரோயினாக நடித்தார். இந்நிலையில் இவர் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். ”வெறிச்சோடிய பால்கனியின்புகைப்படத்தை பதிவிட்டு தனது சோகத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

அவருடைய பதிவில், ''கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று வந்த பிறகு பூட்டிய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். கடந்த ஒருவார காலமாகவே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். காய்ச்சல், அதிமான உடல்சோர்வுதான் இதன் அறிகுறி. அனைவரும் உடல் நலனில் கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

Tags : #OLGA KURYLENKO #CORONAVIRUS #BOND GIRL