'சோப்பு, சானிடைசர் எல்லாம் வச்சிருக்கோம்...' 'யாரையும் அப்படியே ஊருக்குள்ள விடமாட்டோம்...' கொரோனா வைரஸை தடுக்க ஊராட்சி தலைவர் செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூர் மாவட்டம் செந்தலைவயல் பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஊராட்சி தலைவர் செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கோவிட் 19 என்னும் கொரோனா வைரசால் இதுவரை சுமார் 7175 மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விழிப்புணர்வுகளையும் மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. மேலும் பொது மக்களுக்கும் சுய தூய்மையை பின்பற்றுமாறும் அதிகாரிகள்அறிவுறுத்தி வருகின்றனர்.
அதை பின்பற்றும் விதமாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான சோப்பு, கிருமி நாசினி மற்றும் தண்ணீர் குழாய்கள் ஆகியவற்றை அமைத்து தந்துள்ளார் செந்தலைவயல் ஊராட்சி.
ரகமத்துல்லா (50) என்பவர் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பேராவூரணி அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள செந்தலைவயல் ஊராட்சித் தலைவர். இவர் தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகையை ஊரின் நுழைவு வாயிலில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மக்களின் 3 தண்ணீர்க் குழாய்களை அமைத்து, கை கழுவுவதற்காக சோப்பு மற்றும் டெட்டால் கிருமி நாசினி திரவம் ஆகியவற்றை வைத்துள்ளார்.
3 ஆயிரம் பேர் அடங்கிய எங்கள் கிராமத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்னால் முயன்ற அளவு இது போன்ற செயல்களை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். எங்கள் கிராமத்துக்கு வெளியூரில் இருந்து வருபவர்களும், இங்கிருந்து வெளியூர் செல்பவர்களும் கண்டிப்பாக சோப்பு போட்டு கைகளையும், கால்களையும் கழுவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
அதற்காகவே தான் எங்கள் ஊரின் நுழைவு வாயிலான பேருந்து நிலையத்தில் மக்களுக்கு தேவையான தண்ணீர், சோப்பு ஆகியவற்றை வைத்துள்ளேன் என கூறியுள்ளார். இந்த செயல் அந்த ஊர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் செந்தலை பகுதி மக்களை மட்டும் இல்லாமல் அருகில் இருக்கும் பிற கிராம மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
