'கொரோனா'வுக்கு எதிராக தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு!... வழிபாட்டுக்கு பின்... காத்திருந்த அதிர்ச்சி!... கதறிய பாதிரியார்!... பதைபதைக்க வைக்கும் கோரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென் கொரியாவில் கொரோனாவை தடுக்க வழிபாடு நடத்திய தேவாலயத்தில் ஒரே பாட்டில் மூலம் வழங்கப்பட்ட புனித நீரால் 46 பேருக்கு புதிதாக கொரோனா பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் உதயமான கொரோனா, உலகம் முழுதும் பரவி, மனித இனத்தை வதைத்து வருகிறது.
கொரோனாவைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக இயங்கி வரும் நிலையில், தென் கொரியாவில் கொரோனாவை தடுக்க வழிபாடு நடத்திய தேவாலயத்தில் கொடுக்கப்பட்ட புனித நீரால் 46 பேருக்கு புதிதாக கொரோனா பரவியுள்ளது.
தென் கொரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் கொரோனாவுக்கு எதிரான சிறப்பு வழிபாடு நடந்துள்ளது. அந்த வழிபாட்டில் 90 பேர் பங்கேற்றுள்ளனர். வழிபாட்டுக்கு பின்னர், அனைவருக்கும் புனித நீர் வழங்கப்பட்டுள்ளது. ஒரே பாட்டிலில் வைத்து வாய்க்குள் படும்படி புனித நீரை கொடுத்துள்ளனர். இதன் விளைவாக, தற்போது கொரோனா பரவியுள்ளது.
வழிபாட்டில் பங்கேற்ற 46 பேருக்கு கொரோனா பரவியுள்ளதாக தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது. மீதமிருக்கும் நபர்களுக்கும் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தேவாலயத்தின் பாதிரியாரும் ஒருவர். இந்த விவகாரம் தொடர்பாக அந்த பாதிரியார் மன்னிப்பு கோரியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நடந்தவைக்கு நான் மனதார மன்னிப்பு கோருகிறேன். இந்த பழியை முழுவதும் நானே ஏற்கிறேன் என தெரிவித்துள்ளார்.