ஐயோ... கொரோனா வைரஸா...? 'அப்போ இங்க எரிக்க முடியாதுங்க...' உலக சுகாதார நிறுவனம் வழங்கும் தெளிவான நெறிமுறைகள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 17, 2020 09:48 PM

இந்தியாவில் கொரோனா வைரஸால் இரண்டாவதாக உயிரிழந்த 68 வயது மூதாட்டியின் உடலைத் எரிக்க அங்குள்ள தகன மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மறுத்து உள்ளனர்.இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் இது தொடர்பான தெளிவான நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

World Health Organization has issued clear protocols for corona.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் இதுவரை 7,166 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் இரண்டாவதாக உயிரிழந்த 68 வயது மூதாட்டியின் உடலைத் தகனம் செய்வதற்கு அங்குள்ள தகன மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

இது தொடர்பான செய்தி ஒரு தொலைக்காட்சியில் வெளியான பிறகு, மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்புடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, பரவும் வைரஸ் நோய்களால் இறப்பவர்களின் உடலை எவ்வாறு கையாள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.

அதில், `கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் உடலால் எவ்வித ஆபத்தும் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. பெரும்பாலான நுண்ணுயிரிகள் உயிரிழந்த உடலில் நீண்ட நேரம் வாழ்வதில்லை. சில விதிவிலக்குகள் உள்ளன. இவற்றில் காலரா, மூளைக்காய்ச்சல், காசநோய் உள்ளிட்ட சில நோய்களால் உயிரிழந்தவர்களின் உடல்களால் நோய் பரவலாம் என்பதால் அவற்றைக் கையாள வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பரவும் நோய்களால் உயிரிழந்தவர்களின் உடலைக் கையாளும் ஊழியர்கள் தங்கள் சுகாதாரத்தை முதலில் பேண வேண்டும். உடலைக் கையாளும்போது கையுறை கண்டிப்பாக அணிய வேண்டும். ரத்தம் மற்றும் உடலின் திரவங்களைத் தொட வேண்டிய நிலை வந்தால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்' என்று உலக சுகாதார நிறுவனம் தெளிவான நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

Tags : #CORONAVIRUS