VIDEO: 'இத்தன ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு!'... கொரோனா அச்சுறுத்தலால்... வீட்டு ஜன்னல் வழியாக... இளைஞர்கள் செய்த சாகசம்!... 'கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா!?'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அடுக்கு மாடி குடியிருப்பின் கடைசி வீட்டில் இருந்து இருவர் டென்னிஸ் விளையாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் கிருமி 150க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் இரு இளைஞர்கள், ஜன்னலுக்கு வெளியே வீட்டிலிருந்தவாறே டென்னிஸ் விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மைதானம், விளையாட்டு அரங்கம் போன்ற பொது இடங்களில் மக்கள் கூட்டம் சேரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதால், வாலிபர்கள் இருவர் நூதனமான முறையில் டென்னிஸ் விளையாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
When people in Spain were quarantined at home and wanted to play tennispic.twitter.com/GoHG2sc8lV
— Harsh Goenka (@hvgoenka) March 16, 2020
