'ட்வின்ஸ்' குழந்தைகளை கொன்ற நாய்...! 'அவங்க வந்த பிறகு எஜமானிக்கு என் மேல உள்ள பாசம் குறைஞ்சு போச்சு...' - பொறாமையால் நடந்த கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரேசிலில் வீட்டின் உரிமையாளருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை வளர்ப்பு நாய் கடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் பிரிபா பகுதியில் 29 வயதான எலைன் நோவைஸ்ஸிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இவர்களுக்கு, ஆன் & ஆனல் என்று பெயரிடப்பட்டனர். ஒரு மாதமே ஆன இரட்டை பெண் குழந்தைகளை கடந்த ஜுன் மாதம் 23-ம் தேதி வீட்டில் தூங்க வைத்துவிட்டு, பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளார் நோவைஸ்.
வீட்டிற்கு திரும்பி வருகையில் ஒரு அதிர்ச்சிகரமான காட்சியை கண்டுள்ளார் நோவைஸ். அப்போது குழந்தைகள் கதறி அழுவதைக் கேட்ட எலைன், வேகமாக பதறியபடி வீட்டுக்குச் சென்று பார்க்க அவர்களின் வளர்ப்பு நாய், இரு குழந்தைகளின் வயிற்றுப்பகுதியில் பலமாக கடித்துள்ளதைக் கண்டு அதிர்ந்துள்ளார்.
மேலும் நாயை விரட்டிவிட்டு, இரு குழந்தைகளையும் வேகமாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல, ஒரு குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது. மற்றொன்று மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் இறந்தது.
எலைனால் தனது குழந்தைகள் இறந்ததை தற்போது வரை நம்ப முடியவில்லை என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்களின் நாய் இதுவரை அமைதியாகவே இருந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய எலைனின் பக்கத்து வீட்டுக்காரர், 'அந்த நாய் சிறு வயதிலிருந்தே எலைனிடம் பாசத்தை வெளிப்படுத்தும்.மேலும் தனக்கு கிடைத்து வந்த பாசம் குழந்தைகள் பிறந்தபின் தடைபட்டதால், குழந்தைகளை நாய் தாக்கியிருக்கலாம்' என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும், எலைனின் குடும்பத்தாரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
