”சம்பளமா கேக்குற...? இந்தா, நல்லா கடி வாங்கு...!” - ’ஊழியர்’ மேல் நாயை ஏவிவிட்ட ’மஸாஜ் சென்டர்’ உரிமையாளர்... பல்லு ஒடையற அளவுக்கு ’கடித்து’ குதறிய நாய்!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் உள்ள ஆயுர்வேதா சென்டரில், சம்பளம் கேட்ட ஊழியரை நாயை விட்டு கடிக்க வைத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் கிர்கி எக்ஸ்டென்சன் பகுதியில் நிகிதா என்பவர் ஆயுர்வேத ஸ்பா நடத்தி வருகிறார். இந்த சென்டரில் வேலை செய்த சப்னா என்ற பெண், ஜனவரி முதல் ஊரடங்கு தொடங்குவதற்கு முன் பணி செய்ததற்கான சம்பளத்தை கேட்டுள்ளார். ஆனால், நிகிதா தர முடியாது என சொல்ல இருவருக்கும் வாக்கு வாதம் நடந்துள்ளது.
இதையடுத்து, நிகிதா தனது வளர்த்து வந்த நாயை விட்டு சப்னாவை கடிக்க வைத்துள்ளார். இதனால் சப்னாவின் முகத்தில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் தாடையில் இருந்த 2 பற்களும் உடைந்துள்ளன.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சப்னா, ஜுன் 11-ம் தேதி டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். நிகிதா தலைமறைவாகவே பிடிப்பதில் தொய்வு நேர்பட்டுள்ளது. சில என்.ஜி.ஓ அமைப்புகள் தலையிட்டதால் அழுத்தம் அதிகரித்ததை அடுத்து, 20 நாட்கள் கழித்து தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், நிகிதா நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.