மொத்தமா '13' கொல... '50' க்கும் மேற்பட்ட 'பாலியல்' வன்கொடுமைகள்... '40' ஆண்டுகளுக்கு பின் கைதான 'சைக்கோ'... குலை நடுங்க வைக்கும் 'கொடூரம்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்13 கொலைகள், 50 க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 120 க்கும் மேற்பட்ட கொள்ளை முயற்சிகள் என 1975 முதல் 1986 வரை அமெரிக்காவையே அச்சுறுத்தி வந்த சைக்கோ ஒருவனை 40 ஆண்டுகளுக்கு பின் கைது செய்திருக்கின்றனர்.
முன்னதாக, இது போன்ற கொடூர சம்பவங்கள் நடந்த காலகட்டங்களில் கொலைகாரனுக்கு East Area Rapist, Golden State Killer என பல பெயர்களை வைத்த போலீசாரால் கொலையாளியின் அருகில் கூட நெருங்க முடியவில்லை. இந்த வழக்கை விசாரித்து வந்த பல அதிகாரிகள் பணி ஓய்வு பெற்று வந்த நிலையில், 1994 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார் பால் ஹால்.
அமெரிக்காவில், ஒருவரின் மரபணுவின் மாதிரியை பதிவேற்றினால், அவர்களின் மூதாதையர்கள் மற்றும் குடும்பத்தினர் பற்றிய விவரங்களை இணையதளங்கள் மூலம் கண்டறிய முடியும். உடனடியாக குற்றவாளியின் டி.என்.ஏ வை பால் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சோதனை செய்த அடுத்த நாளே அந்த டி.என்.ஏ வின் குடும்பத்தினர் தொடர்பான விவரங்கள் கிடைத்தது.
அவன் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்ய அவன் வீட்டிற்கு அருகிலிருந்த குப்பை தொட்டியில் இருந்த கை ரேகை மாதிரிகளை வைத்து சோதனை செய்தனர். அதனை தொடர்ந்து, அந்த கொடூரனின் பெயர் ஜோசப் ஜேம்ஸ் டி அஞ்சலோ என்பது தெரிய வந்தது. மேலும், அவன் ஒரு காவல்துறை அதிகாரி என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. பணியில் இருந்த போது செய்த தவறால் உயர் அதிகாரிகள் மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளான்.
இது அனைத்தையும் விட கொடூரமாக, சராசரி மனிதர்களை போல மூன்று பெண் குழந்தைகளுடனும், பேரக் குழந்தைகளுடனும் வந்துள்ளான். போலீஸ் அதிகாரியாக இருந்த காரணத்தினால் தடயம் இல்லாமல் குற்றம் செய்ய ஜோசப்பிற்கு தெரிந்துள்ளது. ஒவ்வொரு குற்றத்திற்கும், ஒவ்வொரு விதமான முகமூடி மற்றும் ஷு அணிந்து சென்றுள்ளான். அதே போல, தனியாக இருக்கும் பெண்களை குறி பார்த்து பாலியல் வன்கொடுமை செய்து வரும் ஜோசப், தனது ஷு லேஸ் மூலமாக பெண்களின் கை, கால்களை கட்டி கொடுமை செய்துள்ளான். மேலும், தான் குற்றம் செய்யும் இடத்திற்குள் அருகிலுள்ள போலீசார், எவ்வுளவு நேரத்தில் வருவார்கள் என்பதும் அவனுக்கு தெரியும்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 74 வயதான ஜோசப் ஜேம்ஸ் டி அஞ்சலோவுக்கு பிணையில் வெளிவர முடியாதபடி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். ஜோசப்பிறகு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. கோர்ட்டில் விசாரணையின் போது பேசிய பெண் ஒருவர், 'என்னுடைய 13 வயதில் இவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன். இவனால் எனது இளமை வாழ்க்கை நரகமாக மாறியது' என தெரிவித்தார்.
மற்றொரு பெண்மணியோ, 'என் மகனை கொன்று விடுவதாக மிரட்டி என்னை பாலியல் வன்கொடுமை செய்தான். எப்படி இவனால் எல்லோரையும் போல சாதாரணமாக வாழ முடிந்தது. நான் நிம்மதியாக தூங்கி 42 ஆண்டுகள் ஆகின்றது. இன்று நான் நிம்மதியுடன் தூங்குவேன்' என தெரிவித்துள்ளார்.