VIDEO : பெத்த 'புள்ள'ன்னு கூட பாக்காம... '11' வயசு பையன "தலைகீழ" கட்டிப் போட்டு... கண்முன் தெரியாம தாக்கிய கொடூர 'தந்தை' - மனதை பதற வைக்கும் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகண்முன் தெரியாம தாக்கிய கொடூர 'தந்தை' - மனதை பதற வைக்கும் 'வீடியோ'!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் தனது 11 வயது மகனை வீட்டின் ஜன்னலில் தலைகீழாக கட்டி வைத்து சிறுவனின் தந்தையே சிறுவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ நெட்டிசன்களிடயே கடும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அந்த வீடியோவில் சிறுவன் கெஞ்ச கெஞ்ச அதனை ஒரு பொருட்டாக மதிக்காமல் சிறுவனின் தந்தை தொடர்ந்து தாக்குகிறார். இதில் சிறுவன் வலியால் துடிதுடித்து கதறுகிறான். இருந்த போதும் அந்த தந்தை கொஞ்சம் கூட மனம் மாறாமல் தொடர்ந்து தாக்குகிறார். பின்னர், அந்த நபர் குட்டு கான் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்த கொடூர தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, அந்த சிறுவன் வீட்டிலுள்ள சில பொருட்களை திருடி அதற்கு பதிலாக வாங்கியுள்ளதாக தெரிகிறது. கூலி தொழிலாளியான குட்டு கான், கடந்த சில நாட்களாக தனது மனைவி சண்டையிட்டு கொண்டு சென்றதால் கடும் கோபத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மகனின் செயலால் இன்னும் கோபமடைந்த குட்டு, மகன் என்றும் பாராமல் இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும், சிறுவன் மீது சுடுதண்ணீரும் ஊற்றியுள்ளார். அப்பகுதி மக்கள் அவரைத் தடுக்க முயற்சித்த போதும் அதனை ஒரு பொருட்டாக குட்டு கான் மதிக்கவில்லை.
தொடர்ந்து, குட்டு கானை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
